செய்திகள் :

விருதுநகர் அரசு மருத்துவமனை: கையை அறுத்து போக்சோ கைதி செய்த விபரீதம்.. நடந்தது என்ன?

post image

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போக்சோ வழக்கு கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகாசி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த முருகன் (வயது 57), பள்ளி சிறுமி ஒருவரை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.

போக்சோ
போக்சோ

தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடைமுறைக்காக போலீஸார் தயாரானபோது முருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 11-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், முருகனுக்கு உடல் நலம் தேறியதை அடுத்து இன்று அவரை மருத்துவ பரிசோதனை முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான வேலைகளில் போலீஸார் ஈடுபட்டனர்.

போக்சோ

இதனை அறிந்த முருகன் யாரும் எதிர்பாராத விதமாக மருத்துவமனையில் இருந்த கத்தியை எடுத்து தன்னைத்தானே கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் போலீஸார் அவரை தடுத்து நிறுத்தியதோடு, முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக அவசர சிகிச்சைக்கு மாற்றினர். இந்த சம்பவத்தால் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: தன்பாலின ஈர்ப்பு செயலி மூலம் அறிமுகம்; டிரைவரால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

வடசென்னையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (பெயர் மாற்றம்). 26 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவரின் அப்பா ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். உறவினர் வீட்டின் திருமணத்துக்காக ராஜேஷ் குடும்பத்தினருடன் ப... மேலும் பார்க்க

குப்பைத் தொட்டியில் சடலமாகக் கிடந்த ஒரு வயது பெண் குழந்தை; விசாணையில் போலீஸார்-நடந்தது என்ன?

உத்திரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர்கள் ரமேஷ்குமார்- காஜல் தம்பதி. இவர்களுக்கு ஆர்கேஷ் (4) என்ற மகனும் மஹி (1) என்ற மகளும் இருந்தனர். இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர், வீரபாண்டி, சுண்டமேடு ப... மேலும் பார்க்க

``கணவரை காணவில்லை'' - காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் நாடகம்.. விசாரணையில் பகீர்!

உத்தரப்பிரதேசத்தில் காதலன் துணையோடு பெண்கள், கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இந்நிலையில்,முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை அவரது மனைவி காதலனோடு சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் தற்போது... மேலும் பார்க்க

காரில் வைக்கும்படி முதலாளி கொடுத்த ரூ.1.51 கோடி; கோயில் உண்டியலில் போட்ட டிரைவர் - ஷாக்கான ஆடிட்டர்

பெங்களூரு கோதண்டராமபுரத்தில் வசிக்கும் ஆடிட்டர் ஒருவரிடம் கடந்த 10 ஆண்டுகளாக டிரைவராக வேலை செய்து வந்தவர் ராஜேஷ். இதனால் ராஜேஷ் மீது ஆடிட்டருக்கு மிகவும் நம்பிக்கை உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

கரூர்: பள்ளி தாளாளருக்கு 23 ஆண்டுகள்; தமிழ் ஆசிரியருக்கு 43 ஆண்டுகள் - போக்சோ வழக்கில் அதிரடி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பூஞ்சோலைப்புதூரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், பாப்பிரெட்டிபட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 10 - ம் வகுப்பு பயின்று வந்தார். அப்போது , அப்பள்ளியில் பணிபுரிந்... மேலும் பார்க்க

நெல்லை பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை வழக்கு; ஜாமீனில் சென்றவர்கள் தலைமறைவு - வழக்கு விசாரணை தொய்வு?

நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் தீபக்ராஜ். பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி, தனது தோழியுடன் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றபோது கொட... மேலும் பார்க்க