செய்திகள் :

``விளம்பரங்கள் மூலம் கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிப்பது எவ்வளவு?" - ரவி சாஸ்திரி ஓபன் டாக்

post image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 'ஸ்டிக் டு கிரிக்கெட்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருந்தார்.

அந்தப் பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்கள் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்து மனம் திறந்து பேசினார்.

``எம்.எஸ். தோனி, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் 15 முதல் 20 விளம்பரங்களுக்கு மேல் நடிக்கிறார்கள். விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாகவே ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார்கள். விளம்பரங்களில் நடிப்பது எளிதான ஒன்று. அதிக நேரம் தேவைப்படாது.

கிரிக்கெட் வீரர்கள்
கிரிக்கெட் வீரர்கள்

நான் சில விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். இன்றைய சமூக ஊடக யுகத்தில் செய்தி சேனல்கள் அவர்களையே சுற்றிச் சுற்றி வருவதால், நீங்கள் அவர்கள் வராத ஒரு பகுதிக்குச் செல்ல வேண்டும்.

நீங்கள் 10 ஆண்டுக்காலம் அங்கேயே இருந்தால், அது வேறு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். சச்சின் ஒரு நடைமுறையை அமைத்திருக்கிறார். அவருக்கு அடுத்து தோனி, பின்னர் விராட், ரோஹித் என அவரவர் தன் தனிப் பாதையில் வருவார்கள். இதுபோன்ற செலிபிரட்டிகளுக்குத் தனியுரிமை என்பதெல்லாம் இல்லை. அவர்கள் பொதுச் சொத்து. என்ன நடந்தாலும் நீங்கள் சிறப்பாகச் செயல்படுவீர்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்." என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"கிரேட் அமெரிக்கன் ஐகான்" - மறைந்தார் 90s கிட்ஸ்களின் WWE நாயகன் ஹல்க் ஹோகன்; பிரபலங்கள் இரங்கல்

இன்று மிகப் பிரபலமாக இருக்கும் அமெரிக்க தொழில்முறை குத்துச்சண்டை நிகழ்ச்சியான WWE-ஐ 1980-களில் மக்களிடத்தில் பிரபலமாக கொண்டு சேர்த்தவர்களில் மிக முக்கியமானவர் ஹல்க் ஹோகன்.Horseshoe Mustache லுக்கில் ர... மேலும் பார்க்க

'ரிஷப் பண்ட் வலியால துடிச்சாரு; அவரால ஆட முடியலன்னா?’ - என்ன சொல்கிறார் சாய் சுதர்சன்?

'நான்காவது போட்டி...'இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஒல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்... மேலும் பார்க்க

MS Dhoni: ``என் மகளும் இப்படிதான்.." - உடற்பயிற்சி மீதான இந்தியர்களின் ஆர்வமின்மை குறித்து தோனி கவலை

இந்தியாவில் உடற்பயிற்சி செய்பவர்களின் அளவு குறைந்து வருகிறது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி தெரிவித்திருக்கிறார்.ஹெலிகாப்டர் ஷாட் என்றாலே அது தோனி தான். அவருடைய ஹெலிகாப்டர் ஷாட்களுக்... மேலும் பார்க்க

Harbhajan: `என் அப்பாவை அடித்த உங்களுடன் பேசமாட்டேன்' - ஶ்ரீசாந்த் மகள் பற்றி எமோஷனலான ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஒரு சம்பவத்தை நீக்க வேண்டுமென்றால் அது 2008 ஐபிஎல்லில் ஶ்ரீசாந்துடனான சண்டைதான் எனக் கூறியுள்ள... மேலும் பார்க்க

Praggnanandhaa: நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா; காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்!

கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4-வது சுற்றில் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்... மேலும் பார்க்க

Saina Nehwal: ``எங்கள் ப்ரைவசியை.." - திருமண வாழ்விலிருந்து பிரிவதாக சாய்னா நேவால் அறிவிப்பு!

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவருடனான திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்து கொள்வதாக அறிவித்திருக்கிறார். சாய்னா நேவாலுக்கும், முன்னாள் பேட்மிண்டன் வீரர் பருபள்ளி காஷ்யபுக்கும் கடந்த 2018-ம்... மேலும் பார்க்க