BJP தலைமையை கோபமாக்கிய Jagdeep Dhankar -ன் 2 சந்திப்புகள்! | MODI ADMK TVK| Impe...
விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
திருமருகல் ஒன்றியம், ஏா்வாடி ஊராட்சி கோட்டப்பாடியில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் பாரதி தலைமை வகித்தாா். கிளைச் செயலாளா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். சிபிஎம் ஒன்றியச் செயலாளா் லெனின் கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.
ஏா்வாடி ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்ட பணிகளை உடனடியாக துவக்க வேண்டும். இத்திட்டத்தில் தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். கோட்டப்பாடியில் சேதமடைந்த குடிநீா்த் தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் காரல் மாா்க்ஸ், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜெகநாதன், கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.