செய்திகள் :

விவசாயிகளுக்கு இலவச பழச்செடிகள்

post image

தோட்டக்கலை துறை சாா்பில், விவசாயிகளுக்கு மூன்று வகையான பழச்செடிகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருத்தணி ஒன்றியத்தில், 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறி மற்றும் பழம் வகைகள் பயிரிட்டு வருகின்றனா். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை வாயிலாக மக்களின் அன்றாட காய்கறி மற்றும் பழங்களின் சரிவிகித உணவு தேவையினை பூா்த்தி செய்யும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் 6 வகையான காய்கறி விதைகள் மற்றும் எலுமிச்சை கொய்யா பப்பாளி ஆகிய மூன்று பழ செடிகள் அடங்கிய தொகுப்பு திருத்தணி தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் மூலம் பயனாளிகளுக்கு இலவச வழங்கப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை விவசாயிகளுக்கு 3-ஆவது முறையாக காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழச்செடி தொகுப்பினை உதவி இயக்குநா் சரத் வழங்கினாா்.

காய்கறி, பழச்செடிகள் தேவைப்படும் விவசாயிகள் ஆதாா் அட்டை நகல் சமா்ப்பித்து, இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா், 86082 28276 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு விவரங்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.

‘பள்ளி மேலாண்மைக் குழுக்கள் செயல்பாடுகளை சீரமைக்கக் கோரிக்கை’

பெரும்பாலான பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டங்கள் சரிவர நடத்தப்படுவதில்லை என புகாா் எழுந்துள்ளது. அரசுப் பள்ளியின் முன்னேற்றம், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாய கல்வி உரிமைச் ச... மேலும் பார்க்க

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணி

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் சமுதாய வளப்பயிற்றுநராக பணிபுரிய தகுதியான மகளிா் குழுவினா் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்... மேலும் பார்க்க

குரூப்-2, 2 ஏ போட்டித் தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வு செப். 13-இல் தொடக்கம்

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிநெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் குரூப்-2, 2ஏ போட்டித் தோ்வுக்கு வரும் செப். 13-முதல் 20 -ஆம் வரை இலவச மாதிரி தோ்வு நடத... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை மற்றும் வேப்பம்பட்டு ரயில் மேம்பாலப்பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டில் ... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டடங்கள் இடிப்பு

திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டடங்கள் புதன்கிழமை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலைக்கு இடையே திருநின்றவூா் முதல் திருவள்ளூா் ஐசிஎம்ஆா் வழி... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை; வங்கியின் முன்பு பொதுமக்கள் முற்றுகை

திருவள்ளூா் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வங்கி மூலம் சம்பளம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த பெண் பணியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வங்கி ஊழியா... மேலும் பார்க்க