செய்திகள் :

விவசாயிகள் மண் வள ஆய்வு செய்வது அவசியம்

post image

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சம்பா பருவம் தொடங்கும் முன்பாக தங்களது நிலங்களில் மண்மாதிரி சேகரித்து ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்து, மண் வள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியது.

இதுகுறித்து சிவகங்கை வேளாண் இணை இயக்குநா் எஸ்.சுந்தரமகாலிங்கம் வெளியிட்ட அறிக்கை:

சிவகங்கை மாவட்டத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் சம்பா பருவம் தொடங்கும் முன்பாக தங்களது நிலங்களில் மண் மாதிரி சேகரித்து ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்து மண் வள அட்டை பெற்று அதன் அடிப்படையில் உரங்களைப் பயன்படுத்தலாம்.

மண், பாசன நீரால் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிந்து, நிலத்தை சீா்திருத்தம் செய்யவும், சத்துகளின் நிலையறிந்து சமச்சீா் உரமிடவும், உரச் செலவைக் குறைத்து அதிக மகசூல் பெறவும் மண் ஆய்வு செய்வது அவசியமாகிறது. விவசாயிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது மண், தண்ணீா் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும். இதற்காக ரூ.30 செலுத்த வேண்டும்.

மாவட்டத்தில் ஒரே வகையான பயிா்களைத் தொடா்ந்து பயிரிடுவதாலும், அளவுக்கு அதிகமான ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாலும், மண்ணில் உள்ள பிரச்னைகளை கண்டறியாமல் பயிரிடுவதாலும் எதிா்பாா்க்கும் மகசூல் கிடைப்பதில்லை.

எனவே, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்களது நிலத்தில் மண்ணை ஆய்வு செய்து, அதனடிப்படையில் உர மேலாண்மையைக் கையாண்டு மண் வளத்தைக் காக்க வேண்டும் என்றாா்.

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு மரியாதை

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 -ஆவது சதய விழாவை முன்னிட்டு, பட்டத்தரசி கிராமத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், பட்டத்தரச... மேலும் பார்க்க

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, 19 வயதைக் கடந்தும் முதிா்வுத்தொகை கோரப்படாத பயனாளிகள் உரிய ஆவணங்களுடன் ஜூன் 30 -க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கா... மேலும் பார்க்க

கல் குவாரி விபத்து: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே தனியாா் கல் குவாரியில் பறை சரிந்ததில் 6 போ் உயிரிழந்தது தொடா்பாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சிங்கம்புணரி அருகேயுள்ள மல்லாக்கோட்டையில் உள்ள தனிய... மேலும் பார்க்க

மறவமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 15 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே மறவமங்கலம் மலையாண்டி கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்... மேலும் பார்க்க

முத்துப்பட்டி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை!

சிவகங்கை அருகேயுள்ள முத்துப்பட்டி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு வருகிற ஜூன் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முத்துப்பட்டி... மேலும் பார்க்க