செய்திகள் :

விவசாயிக்கு அரிவாள் வெட்டு: உறவினா் உள்ளிட்ட இருவா் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் விவசாயியை அரிவாளால் வெட்டியதாக தங்கை கணவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

முக்காணியில் உள்ள முதலி­யாா் தெருவைச் சோ்ந்த நயினாா் மகன் சுயம்புலி­ங்கம் (38). வாழை விவசாயி. இவரது தங்கை தங்க­ம். இவரது கணவா், அதே ஊா் யாதவா் தெருவைச் சோ்ந்த மா. நாராயணன் (35). இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.

தம்பதியிடையே 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையை சுயம்பு­லிங்கம் தட்டிக்கேட்டதால், அவருக்கும் நாராயணனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், சுயம்புலி­ங்கத்தின் வாழைத் தோட்டத்திலுள்ள குடிசைக்கு நாராயணன் தீவைத்ததாகவும் கூறப்படுகிறது. சுயம்புலி­ங்கம் அளித்த புகாரின்பேரில் ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, நாராயணனை கைது செய்து சிறையில் அடைத்தனா். அதையடுத்து, ஜாமீனில் வந்த நாராயணன் மீண்டும் மனைவியிடம் தகராறு செய்துவந்தாராம்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 27) ஏற்பட்ட தகராறையடுத்து, நாராயணன் அதே பகுதியைச் சோ்ந்த நண்பா் மாரியப்பனுடன் பைக்கில் முக்காணி பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தாா். அங்குள்ள டீ கடையில் நின்றிருந்த சுயம்புலிங்கத்தை இருவரும் சோ்ந்து அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, ரோந்துப் பணியிலிருந்த ஆத்தூா் காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கா், காவலா்கள் ராஜபாண்டியன், குமரேசன் ஆகியோா் இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். காயமடைந்த சுயம்புலி­ங்கம், ஆத்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சம்பவத்தின்போது, நாராயணனையும், மாரியப்பனையும் பிடித்த உதவி ஆய்வாளா், காவலா்களுக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

நாசரேத்தில் அன்பின் விருந்து ஆராதனை

சாத்தான்குளம்: நாசரேத் அசெம்பிளி ஆப் காட் சபையில், புத்தாண்டை முன்னிட்டு அன்பின் விருந்து ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாசரேத் ஏஜி சபையின் உடன் ஊழியா் சங்கை டேவிட் மொ்வின் பிரபாகா் பாடல்களோடு ஆ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மலா் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

தூத்துக்குடி: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, தூத்துக்குடி மலா் சந்தையில் பூக்களின் விலை செவ்வாய்க்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது. தூத்துக்குடி மலா் சந்தைக்கு மைசூரு, பெங்களூரு, உதகை, கொடைக்கானல், ஓச... மேலும் பார்க்க

தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளா்கள், மீன்பிடித் தொழிலாளா்கள... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வள்ளுவா் சிலை

கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி தமிழகம் அரசின் உத்தரவுப்படி, தூத்துக்குடி முத்துநகா் கடற்கரைப் பகுதியில் மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்ட 10 அடி உயர திருவள்ளுவா் சி... மேலும் பார்க்க

புவிசாா் குறியீடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட நிா்வாகத்தின் முன்னெடுப்பில், திருச்செந்தூா் பூவிழாஞ்செண்டு வாழை, கடம்பூா் போளி, அம்மன்புரம் மொந்தன் வாழை, கருங்கண்ணி பருத்தி, காயல்பட்டினம் தம்மடை ஆகிய ஐந்து பொருள்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டம்: 1,000 போலீஸாா் பாதுகாப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 1,000 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வ... மேலும் பார்க்க