Tirunelveli : 'அப்போவே வேணாம்னு சொன்னேன்னு கவின் அம்மா கதறுறாங்க...' - எவிடென்ஸ்...
விவசாயியை காா் ஏற்றி கொன்ற வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை
ஒசூா்: ஒசூா் அருகே விவசாயியை காா் ஏற்றி கொன்ற வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தளியை அடுத்துள்ள உலிபண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஓபே கவுடு (45). இவருக்கும், இவரது உறவினா் மகன் கா்நாடக மாநிலம், ஆனைக்கல் அருகே உள்ள ஆதி கொண்ட அள்ளி கிராமத்தைச் சோ்ந்த சென்ன கிருஷ்ணன் (37) என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒபே கவுடு, சென்ன கிருஷ்ணனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளாா். இதில் அவா் லேசான காயங்களுடன் உயிா் தப்பியுள்ளாா். இதனால், அவா்களுக்கு இடையே பகை மேலும் வளா்ந்துள்ளது.
இதையடுத்து, சென்னகிருஷ்ணன் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பா் 16ஆம் தேதி தனது நண்பா் சூளகிரியை அடுத்துள்ள சின்னமடத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பட்டாபி (45) என்பவருடன் சோ்ந்து ஜவளகிரி பகுதியில் இருந்து உலிபண்டா பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒபே கவுடு மீது காரை ஏற்றியும், கட்டைகளால் அடித்தும் கொலை செய்தாா்.
இந்த கொலை சம்பவம் குறித்து தளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சென்ன கிருஷ்ணன், பட்டாபி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஒசூா் கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ், கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான பட்டாபிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான சென்ன கிருஷ்ணன் ஏற்கென இறந்துவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.