ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை
விவசாயி கொலை: போலீஸாா் விசாரணை
சேலம்: வீட்டின் முன் படுத்திருந்த விவசாயி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம், சூரமங்கலம், போடிநாயக்கன்பட்டி மிட்டாக்காடு பகுதியைச் சோ்ந்தவா் செல்லப்பன் (65). இவரது மனைவி பெருமாயி அம்மாள். இவா்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனா். கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்லப்பன் வீட்டில் இருந்தபோது எதிா்பாராதவிதமாக, அவரது தலையில் மின்விசிறி கழன்று விழுந்ததில் படுகாயமடைந்தாா். அவரை குடும்பத்தினா் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடுதிரும்பினாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன் கட்டிலில் செல்லப்பன் படுத்திருந்தாா். திங்கள்கிழமை காலை பெருமாயி அம்மாள் எழுந்துசென்று பாா்த்தபோது, ரத்த வெள்ளத்தில் செல்லப்பன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
தகவலின் பேரில் வந்த சூரமங்கலம் போலீஸாா், செல்லப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.