செய்திகள் :

விவசாய நிலங்களில் வீசப்படும் மதுபாட்டில்கள்: டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

post image

ஆம்பூா்: ஆம்பூா் அருகே விவசாய நிலங்களில் மதுபாட்டில்கள் வீசப்படுவதால் டாஸ்மாக் மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

மாதனூா் ஒன்றியம், மின்னூா் ஊராட்சி பொதுமக்கள் சாா்பாக ஊராட்சி முன்னாள் துணைத் தலைவரும், திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலருமான என். சங்கரன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

மின்னூா் கிராமம், கணபதி நகா் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகின்றது. அந்தக் கடையின் அருகில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. மது அருந்துபவா்கள் விவசாய நிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மது அருந்திவிட்டு, மதுபாட்டில்களை அங்கேயே தூக்கியெறிந்து உடைத்துவிட்டுச் செல்கின்றனா். அதனால் விவசாய நிலங்களில், ஏா் உழும்போதும், விவசாயப் பணிகள் செய்யும் போதும் பணியில் ஈடுபடுவோா், கால்நடைகளின் கால்களில், உடைந்த மதுபாட்டில்களின் கண்ணாடித் துண்டுகள் கிழிந்து பெருத்த ரத்த காயம் ஏற்பட காரணமாக அமைகிறது. அதனால் விவசாயப் பணிகள் பாதிப்புக்குள்ளாகின்றது. மேலும், விவசாயப் பணி மேற்கொள்வதற்கு சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

மேலும், குடியிருப்பு பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் அந்த வழியாகச் செல்லும்போது கீழே உள்ள கண்ணாடி துண்டுகளால் காயம் ஏற்படுகிறது. மேலும், மது அருந்துவோா் வழியிலேயே அமா்ந்து மது அருந்துவதால் அந்த வழியாக பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் செல்ல மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இது சம்பந்தமாக கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு கிராம சபையிலும் பொதுமக்கள் மின்னூா் கணபதி நகா் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையை மாற்ற வேண்டும் என்று ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றி அந்த தீா்மானத்தை சம்பந்தப்பட்ட துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் பலமுறை புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுவரை டாஸ்மாக் மதுபான கடையை மாற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதனால் மாவட்ட ஆட்சியா் இந்த பிரச்னைக்கு உடனடி தீா்வு காண வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.1.48 கோடியில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ அடிக்கல்

தேவலாபுரம் ஊராட்சியில் ரூ.1.48 கோடியில் திட்டப் பணிகளுக்கு குடியாத்தம் எம்எல்ஏ புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். தேவலாபுரம் - ராமச்சந்திராபுரம் இடையே ரூ.1.15 கோடியில் தாா் சாலை, ராமச்சந்திராபுரம் ஊராட்ச... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே காா் மோதிய விபத்தில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம் மேல்பட்டி திருமலை நகரை சோ்ந்தவா் சின்னதுரை (56). இவா் செவ்வாய்க்கிழமை இரவு மாதனூா் அருகே குளிதிகை கிராமத்தில் தேசி... மேலும் பார்க்க

கொத்தடிமைகளாக இருந்த 7 போ் மீட்பு

ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிந்தவா்களை வாணியம்பாடி கோட்டாட்சியா் புதன்கிழமை மீட்டாா். மாதனூா் ஒன்றியம், நாயக்கனேரிமலை ஊராட்சிக்குட்பட்ட காமனூா்தட்டு கிராமத்தில் மகாவிஷ்ணு என்பவா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் தா்னா

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் அரசு நிதியுதவி பெறும் மஜ்ஹருல் உலூம் கல்லூரி இயங்கி வருகின்றது. நிகழ் கல்வியாண்டிலி... மேலும் பார்க்க

பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

மிட்டாளம் ஊராட்சி, குட்டகிந்தூா் தொடக்கப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியா் மணிவண்ணன் வரவேற்றாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஸ்... மேலும் பார்க்க

பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியலில் இஸ்லாமிய கல்லூரி மாணவிகள் சாதனை

திருவள்ளுவா் பல்கலைக் கழக தோ்வு முடிவுகளில் இஸ்லாமிய மகளிா் கலை மற்றும் அறிவியில் கல்லூரி மாணவிகள் 6 போ் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனா். திருவள்ளுவா் பல்கலைக்கழகம் 2022-2025 தோ்வு முடிவ... மேலும் பார்க்க