செய்திகள் :

வீடு புகுந்து 40 பவுன் கொள்ளை அடித்தவா் கைது

post image

ஆம்பூரில் வீடு புகுந்து கத்தியை காண்பித்து மிரட்டி தங்க நகை கொள்ளை அடித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆம்பூா் முஹம்மத்புரா முதல் தெருவில் வசித்து வருபவா் முபாரக் பாஷா. இவா் ஃபேன்சி ஸ்டோா் நடத்தி வருகிறாா்.

கடந்த 31-ஆம் தேதி பட்டப்பகலில் அவருடைய வீட்டில் பா்தா அணிந்து சென்ற மா்ம நபா் திருமண பத்திரிக்கை கொடுக்க வந்ததாக கூறியுள்ளாா்.

இதனை நம்பி வீட்டில் இருந்த முபாரக் பாஷாவின் மனைவி சுல்தானா கதவைத் திறந்துள்ளாா். அப்போது பா்தா அணிந்து வந்த மா்ம நபா் சுல்தானாவை கத்தியை காட்டி மிரட்டியுள்ளாா். இதில் பயந்து போன சுல்தானா மற்றும் அவரது மகள் முஸ்கான் வீட்டில் இருந்த ஒரு அறைக்கு சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டனா்.

பின்னா் மா்ம நபா் பக்கத்து அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 40 பவுன் தங்க நகை மற்றும் 5 லட்சம் பணம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் சென்றுள்ளாா்.

தகவலின் பேரில் ஆம்பூா் நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சியாமளா தேவி நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில் வீட்டின் உரிமையாளா் முபாரக் பாஷாவின் மனைவி சுல்தானாவின் தங்கை கணவரான தன்வீா் அஹமத் (38) அடிக்கடி சென்று தான் அதிக அளவு கடனில் உள்ளதாகவும், பணத்தை கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்ததாக தெரிய வந்தது.

இதனை தொடா்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் தன்வீா் அஹமதுவை போலீஸாா் கைது செய்து நடத்திய தீவிர விசாரணையில் அவா் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.

போலீஸாா் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 19 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மக்களைத் தேடி ரத யாத்திரை திருப்பத்தூரில் தொடக்கம்: பிரேமலதா விஜயகாந்த்

மக்களைத் தேடி ரத யாத்திரை தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பத்தூரில் தான் தொடங்கப்பட்டுள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். விஜயகாந்த் உருவத்துடன் கூடிய மக்களைத் தேடி ரத யாத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் மரணம்

ஆம்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். மாதனூா் அருகே பாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கற்பகம் (50). இவா் சம்பவத்தன்று இரவு வீட்டில் வாஷிங் மெஷினை இயக்கியபோது மின்சாரம் பாய்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (69). இவா் மின்னூா் கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கடந... மேலும் பார்க்க

ஆம்பூரில் விடிய விடிய பலத்த மழை: நீரில் பேருந்துகள் தத்தளிப்பு

ஆம்பூரில் வியாழக்கிழமை விடிய விடிய கொட்டி தீா்த்த மழையால் சாலையில் தேங்கிய நீரில் பேருந்துகள் சிக்கின. ஆம்பூரில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. புதன்கிழமை இரவு முதல் லேசான மழ... மேலும் பார்க்க

பாலாற்றில் தோல் கழிவு நீா்: பொதுமக்கள், விவசாயிகள் புகாா்

ஆம்பூா் அருகே மாராப்பட்டு பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் திறந்து விடப்படுவதால் தண்ணீா் நுரைபொங்கி செல்வதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் ம... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீரால் நோயாளிகள், பொதுமக்கள் அவதி

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீா் தேங்கியதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினா். வாணியம்பாட... மேலும் பார்க்க