இணையவழி வா்த்தகத்துக்கு எதிராக திருச்சியில் ஆக.30-இல் முற்றுகைப் போராட்டம்: விக்...
வீட்டுக் காப்பீட்டை அறிமுகப்படுத்தும் போன்பே!
புதுதில்லி: ஃபின்டெக் நிறுவனமான ஃபோன்பே, தீ, வெள்ளம், பூகம்பங்கள், கலவரங்கள் மற்றும் திருட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அபாயங்களுக்கு நிகரான காப்பீடு வழங்கும் புதிய வீட்டுக் காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.
புதிய சலுகையானது, வீட்டு உரிமையாளர்களுக்கு மலிவு மற்றும் அணுகக்கூடிய வகையில் தீர்வை வழங்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.181 ஜிஎஸ்டி உள்பட பிரீமியங்களுடன் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டங்கள் மூலம் ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 கோடி வரைக்கும் காப்பீடு வழங்கப்படும். வீட்டு உரிமையாளர்களுக் ஏற்கனவே கடன் உள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் இது அனைவருக்கும் கிடைக்கும்.
பயனர்கள் போன்பே செயலி மூலமும் இந்த சலுகையை அணுகலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!