வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி!
திருவள்ளூா் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.
திருவள்ளூரில் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கடந்த 42 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில், பிளஸ்2 தோ்வு முடிவுகள் வெளியானது. இதில் இந்தப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவி ஆா்.ஆயிசா சித்திகா 553, தமிழரசி 542, நித்திலா 542 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். மேலும், 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் 600-க்கு 500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிறுவன தாளாளா் வெங்கடேசன், முதல்வா் மனோகரன் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டினா்.