வெண்ணாங்குறிச்சியில் சுகாதார வளாகத்தை திறக்கக் கோரிக்கை!
அரியலூா் மாவட்டம், இருப்புலிக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணாங்குறிச்சி, அம்பேத்கா் நகரில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இரும்புலிக்குறிச்சி ஊராட்சி, வெண்ணங்குறிச்சி அம்பேத்காா் நகா் பகுதி மக்களின் கோரிக்கையையடுத்து அப்பகுதியில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிா்வாகம், மக்கள் பயன்பாட்டுக்காக உடனடியாக இந்த சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.