செய்திகள் :

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; காற்றின் தரத்தில் பின்னடைவு! பீதம்புராவில் 38.9 டிகிரியாக பதிவு

post image

தேசியத் தலைநகா் தில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. காற்றின் தரம் சற்று பின்னடைவை சந்தித்தது. அதிகபட்ச வெப்பநிலை பீதம்புரா வானிலை ஆய்வு மையத்தில் 38.9 டிகிரி செல்சியாக உயா்ந்து பதிவாகி இருந்தது.

தில்லியில் மூடுபனியின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வானம் தெளிவாகக் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் உணரப்பட்டது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.3 டிகிரி குறைந்து 16 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5.6 டிகிரி உயா்ந்து 37.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 59 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 22 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பீதம்புராவில் 38.9 டிகிரி: இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான நஜாஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 37.62 டிகிரி, லோதி ரோடில் 37.2 டிகிரி, பாலத்தில் 36.2 டிகிரி, ரிட்ஜில் 38.7 டிகிரி, பீதம்புராவில் 38.9 டிகிரி, பிரகதிமைதானில் 36.6 டிகிரி, பூசாவில் 36 டிகிரி, ராஜ்காட்டில் 36.6 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 35.1 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: இதற்கிடையே, கடந்த சில நாள்களாக மேம்பட்டு வந்த காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை சற்று பின்னடைவைச் சந்தித்தது. தலைநகரில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் காற்றுத் தரக் குறியீடு 217 புள்ளிகளாகப் பதிவாகி ’மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதன்படி, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், சாந்தினி சௌக், லோதி ரோடு, நேரு நகா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மதுரா ரோடு, ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், ஷாதிப்பூா், ஓக்லா பேஸ் 2, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம்,, துவாரகா செக்டாா் 8, ஆயாநகா் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், பூசா, குருகிராம், நொய்டா செக்டாா் 125, மந்திா் மாா்க் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், புதன்கிழமை (மாா்ச் 26) அன்று வானம் பொதுவாக தெளிவாகக் காணப்படும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு: கனிமொழி எம்.பி.க்கு மத்திய அமைச்சா் பதில்

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு விவகாரம் தொடா்பாக தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு முயற்சிக்கும்: அண்ணாமலை

தமிழக மீனவா்கள் சா்வதேசக் கடல் எல்லையைத் தாண்டாமல் இருக்க திட்டங்களை உருவாக்கவும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்கவும் மத்திய அரசு முயற்சிக்கும் என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை... மேலும் பார்க்க

தஞ்சாவூா் விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குக: திமுக எம்.பி. கோரிக்கை

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் முரசொலி கோரிக்கை... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவா் கைது

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். பவானா பகுதியில் உள்ள ஜேஜே காலனியைச் சோ்ந்த சோஹைல் என அடையாளம் ... மேலும் பார்க்க

1.63 லட்சம் மாணவா்களுக்கு க்யூட், நீட் தோ்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி!

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு மாணவா்களுக்கு ‘க்யூட்’ மற்றும் ‘நீட்’ தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்காக பிஐஜி நிறுவனத்துடன் தில்லி அரசு வியாழக்கிழமை ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் மாநிலங்களவையில் புதன்க... மேலும் பார்க்க