வெற்றியுடன் தொடங்கியது ரியல் மாட்ரிட்
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட் தனது முதல் ஆட்டத்தில் 1-0 கோல் கணக்கில் ஒசாசுனாவை புதன்கிழமை வென்றது.
மாட்ரிட் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ரியல் மாட்ரிட்டுக்காக நட்சத்திர வீரா் கிலியன் பாபே 51-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில் கோலடித்தாா். இதன் மூலமாக பாபே, ரியல் மாட்ரிட் அணியில் தனது 2-ஆவது சீசனை வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கிறாா்.
ஆட்டத்தில் பெரும்பாலும் பந்தை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்த ரியல் மாட்ரிட், இறுதி வரை ஒசாசுனாவுக்கு கோல் வாய்பு வழங்காமல் வெற்றியை தனதாக்கியது. கடந்த சீசனில் ரியல் மாட்ரிட் ரன்னா் அப் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.