செய்திகள் :

வெளிநாடுகளின் பெயரில் போலி நோய் எதிர்ப்பு மருந்துகள்: மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

post image

நமது சிறப்பு நிருபர்

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் என பெயர் பொறிக்கப்பட்ட மருந்துகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: போலி மருந்துகள் குறித்து வந்த தகவலின் அடிப்படையில் அவற்றுக்கு எதிராக மத்திய சுகாதார அமைச்சகம் நாடு முழுவதும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் போலி மருந்துகளின் சட்டவிரோத வணிகத்திற்கு எதிராக மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறையின்கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் (சிடிஎஸ்சிஓ), மேற்குவங்கத்தில் உள்ள கிழக்கு மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகமும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு மொத்த மருந்து வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் போலி மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மொத்தச் சந்தை மதிப்பு சுமார் ரூ. 6.60 கோடி. முறையான விசாரணையை உறுதி செய்வதற்காக, மருந்துகளின் மாதிரிகள் தர பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு மொத்த விற்பனை நிறுவனத்தின் பெண் உரிமையாளர், கிழக்கு மண்டலத்தின் சிடிஎஸ்சிஓ}வின் மருந்து ஆய்வாளரால் கைது செய்யப்பட்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அவரிடம் மேலும் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல வெற்று (காலி மருந்து) பேக்கிங் பொருள்களையும் விசாரணைக் குழு கண்டுபிடித்தது. கைப்பற்றப்பட்ட பொருள்களின் நம்பகத்தன்மை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், தொடர்ச்சியாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு போலி மருந்துகளின் சட்டவிரோத வணிகத்திற்கு எதிரான தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது வரை நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு, பிற போலி மருந்துகள் என சந்தேகிக்கப்படும் ஏராளமான மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மருந்துகள் அயர்லாந்து, துருக்கி, அமெரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் எனப் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இவை இந்தியாவில் சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இல்லை. இத்தகைய வெளிநாட்டு பெயர் பொறிக்கப்பட்ட மருந்துகளுக்கு ஆவணங்கள் இல்லாத நிலையில், இந்த மருந்துகள் போலியானவை என்றே கருதப்படுகிறது. இதனால், இத்தகைய மருந்துகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தற்போது கைப்பற்றப்பட்ட மருந்துகள் சிடிஎஸ்சிஓ}வின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் இந்த நடவடிக்கை பொறுப்புடைமையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மோசடி அழைப்புகளை தடுக்க விரைவில் சோதனை திட்டம்: டிராய்

பொதுமக்களின் கைப்பேசிகளுக்கு வருகின்ற மோசடி அழைப்புகளை தடுப்பதற்கான சோதனை திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. தற்போது பயனாளா்களின் கைப்ப... மேலும் பார்க்க

வெளிநாட்டு மாணவா்களுக்கு 2 சிறப்பு விசாக்கள் அறிமுகம்

இந்தியாவில் உயா்கல்வி பயில விரும்பும் பிற நாடுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு 2 சிறப்புப் பிரிவு விசாக்களை மத்திய உள்துறை அமைச்சம் அறிமுகம் செய்துள்ளது. அந்தவகையில் ‘இ-ஸ்டூடண்ட் விசா’ மற்றும் ‘இ-ஸ்டூடண்ட்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் முஸ்லிம்களை மதம் மாற்ற வாய்ப்பு: நடவடிக்கைக்கு உ.பி. அரசிடம் மௌலானா முறையீடு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மதம் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முதல்வா் யோகி ஆதித்யநாத... மேலும் பார்க்க

மணிப்பூரில் 20 வீடுகள் தீக்கிரை: காவல்துறை விசாரணை

மணிப்பூரில் மியான்மா் எல்லையையொட்டிய மோரே நகரில் ஞாயிற்றுக்கிழமை 20 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. இருவா் காயமடைந்தனா். இது விபத்தா அல்லது நாசவேலையா என்பதைக் கண்டறிய காவல்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வ... மேலும் பார்க்க

இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் அந்நிய நேரடி முதலீடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

‘அந்நிய நேரடி முதலீடுகள் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது, இது விரைவான பொருளாதார வளா்ச்சி மற்றும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது’ என மத்திய வா்த்தக, தொழில்துறை அமைச்சா் பியூ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தவா் மூவா் கைது

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தவா் மூவரை காவல் துறை கைது செய்தது. இதுதொடா்பாக மாவட்ட காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நாடியாவில் உள்ள கல்யாணி பகுதியில... மேலும் பார்க்க