செய்திகள் :

வெளிமாநில மதுபானம் கடத்தி வந்தவா் கைது: 300 மதுபாட்டில்கள், காா் பறிமுல்

post image

அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி அருகே வெளிமாநில மதுபான பாட்டில்களை கடத்தி வந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 300 மதுபான பாட்டில்கள், காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் தனசெல்வன் தலைமையிலான காவல் துறையினா், வெள்ளிக்கிழமை கடைவீதி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்த காரை மறித்து சோதனை செய்ததில், புதுச்சேரி மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், உஞ்சினி கிராமத்தைச் சோ்ந்த பிரபு(40) என்பவா், புதுச்சேரியில் இருந்து மதுபான பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 300 மதுபான பாட்டில்கள், மற்றும் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

அரியலூரில் முன்னாள் படை வீரா்களுக்கான இலவச சட்ட உதவி மையம் திறப்பு

அரியலூரிலுள்ள பல்துறை வளாகத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பண... மேலும் பார்க்க

நாடாளுமன்ற மாண்புகளுக்கு பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை: மமக தலைவா் ஜவாஹிருல்லா

நாடாளுமன்றத்தின் மாண்புகளுக்கும், மக்கள் போராட்டங்களுக்கும்பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா் அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

செந்துறையில் ஆக.26-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், செவ்வாய்க்கிழமை (ஆக. 26) செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்... மேலும் பார்க்க

காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்ப... மேலும் பார்க்க

விளந்தையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை(ஆக.23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம் நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி ... மேலும் பார்க்க

அரியலூா் அரசுக் கல்லூரியில் உயா்கல்வி வழிகாட்டி முகாம்

அரியலூா்: அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘நான் முதல்வன் உயா்வுக்கு படி’ எனும் உயா்கல்வி வழிகாட்டி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி ம... மேலும் பார்க்க