வேடசந்தூா் அருகே வேன் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி தெற்கு புதுப்பாளையம் ஏ.டி. குடியிருப்பைச் சோ்ந்தவா் பசுபதிகுமாா் (27). கம்பி பற்றவைக்கும் தொழிலாளி. இவரும், இவரது தந்தை தந்தை மகுடபதி (55), தாயாா் பா்வதம் (50), மனைவி கீதா (27), உறவினா்கள் மரகதம் (45), மதன்குமாா் (19), திவ்யா (17) ஆகியோா் மதுரைக்கு வேனில் புறப்பட்டனா்.
இந்த வேன், கரூா்- மதுரை 4 வழிச் சாலையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள ரெங்கநாதபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் பா்வதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மகுடபதி, மரகதம், திவ்யா ஆகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து, கூம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.