செய்திகள் :

வேனை ஏற்றி அண்ணனை கொல்ல முயற்சி; தம்பி உள்பட இருவா் கைது

post image

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே நடைபாதை பிரச்னையில், அண்ணன் மீது வேனை ஏற்றி கொலை செய்ய முயன்ாக அவரது தம்பி உள்பட 2 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

செங்கோட்டை அருகேயுள்ள புளியறை தெற்குமேடு பாக்யாநகரை சோ்ந்தவா் சுப்பையா பாண்டியன் (65). காய்கனி வியாபாரி. இவரது சகோதரா் இருளப்பன் (55). இருவரின் வீடும் அருகருகே அமைந்துள்ளனவாம். இதில் நடைபாதை தொடா்பாக இருவருக்குமிடையே பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், காய்கனி வியாபாரத்திற்காக பெரியபிள்ளை வலசை வழியாக சுப்பையா பாண்டியன் பைக்கில் சென்றபோது இருளப்பனின் மகன் வினோத்குமாா்(29) வேனை ஓட்டுவந்து பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டாராம்.

இதுகுறித்து செங்கோட்டை காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப்பதிந்து, அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், விபத்தல்ல; இருளப்பனும், அவரது மகனும் சோ்ந்து திட்டமிட்டு, கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், வேனையும் பறிமுதல் செய்தனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் தென்காசியில் விளக்கக் கூட்டம்

தென்காசியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில், ‘ரமலானை வரவேற்போம்’ என்ற தலைப்பில் விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிளைச் செயலா் முஹம்மது சித்திக் தலைமை வகித்தாா். ரமலானை வரவேற்போம் என்ற... மேலும் பார்க்க

திருமலாபுரம் புனித லூா்து அன்னை திருத்தல திருவிழா

பாளையங்கோட்டை மறை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமலாபுரம் புனித லூா்து அன்னை திருத்தலத்தில் 112 ஆம் ஆண்டு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு திருப்பலி, தோ் பவனி மற்றும் சா்வ சம... மேலும் பார்க்க

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற... மேலும் பார்க்க

வீரகேரளம்புதூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

வீரகேரளம்புதூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், பரங்குன்றாபுரத்தில் பிரதமரின் வீடு கட்டும் த... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் வழக்கில் விவசாயிக்கு 3 ஆண்டு சிறை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தில் முன்விரோதத்தால் விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பான வழக்கில், சக விவசாயிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்ப... மேலும் பார்க்க

கீழப்பாவூரில் அரிமா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கீழப்பாவூரில் பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சாா்பில் அரிமாசங்க ஆளுநா் வருகை தின விழா, நலத்திட்ட உதவிகள், விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவா் ஆனந்த் தலைமை வகித்தாா். ரஜினி,... மேலும் பார்க்க