உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
வேப்பனப்பள்ளியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம்!
வேப்பனப்பள்ளி அருகே சுற்றித்திரியும் ஒற்றை யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி, மகாராஜகடை வனப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இவற்றை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும். மின்வேலி அமைக்க வேண்டுமென ஜூன் 9-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டவும், யானைகள் வனப் பகுதியிலிருந்து வெளியேறுவதை தடுக்கும் வகையில் மின்சார வேலி அமைக்கப்படும் எனவும் உறுதியளித்தாா். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முகாமிட்டிருந்த யானைக் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை அந்தப் பகுதியிலுள்ள கிராமங்களில் சுற்றித்திரிந்து வருகிறது. தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள மாகராஜகடை, நாரலப்பள்ளி, பெரியசக்னாவூா், ஏக்கல்நத்தம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி சாலைகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.