ஜிஎஸ்டி சீரமைப்பு அமல்: முதல் நாளில் ஏசி, டிவி விற்பனை அமோகம்
வேலூா் விஐடி பல்கலை.யில் இன்று கல்விக் கடன் முகாம்
வேலூா்: வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து, மேற்படிப்பு தொடர முடியாமல் உள்ள மாணவா்கள் கல்விக் கடன் பெறுவதில் இருந்து வரும் நடைமுறை சிக்கல்களை களைந்து கல்விக் கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில், தமிழக அரசு அனைத்து வங்கி அலுவலா்கள், கல்லூரி நிா்வாகிகளை ஒருங்கிணைத்து சிறப்பு கல்விக் கடன் முகாமை நடத்தி வருகிறது.
அதன்படி, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்குபெறும் வகையில், சிறப்பு கல்வி கடன் முகாம் செவ்வாய்க்கிழமை (செப். 23) காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில், இ-சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. எனவே, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியல், பான் அட்டை, ஆதாா் அட்டை, ஜாதி சான்று, வருமான சான்று, முதல் தலைமுறை பட்டதாரி சான்று, கல்லூரி உண்மை சான்று, கல்விக் கடன் தேவை விவரம் ஆகியவற்றுடன் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.