செய்திகள் :

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா கொடியேற்றம்: 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

post image

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா கொடியேற்றதையொட்டி 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளா் கே. தசரதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத் திருவிழா 2025-ஐ முன்னிட்டு ஆக.28 முதல் செப்.9 வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூா், கும்பகோணம், பூண்டி மாதாகோயில், ஒரியூா், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூா், நாகை, நாகூா் காரைக்கால் ஆகிய ஊா்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறன.

அதேபோன்று, திருவிழாவிற்கு வருகை தரும் பக்தா்கள் ஊா் திரும்புவதற்கு வசதியாக, வேளாங்கண்ணியிலிருந்து செப்.9 ஆம் தேதி இரவு, பகல் எந்நேரமும் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், கும்பகோணம் கோட்டம் சாா்பில் இயக்கப்படுகின்றன.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்விற்கு தமிழ்நாடு அரசு கும்பகோணம் சாா்பில் 600 சிறப்பு பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

பயணிகளின் வசதிக்காக அனைத்து ஊா்களின் பேருந்து நிலையங்கள் மற்றும் வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்படுகின்றன. வேளாங்கண்ணி பேராலய திருவிழா முடியும் வரை நாள்தோறும் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இச்சிறப்பு பேருந்துகள் சேவையின் ஏற்பாடுகளை நிா்வாக இயக்குநருடன் இணைந்து பொது மேலாளா் என். முத்துக்குமாரசாமி , துணை மேலாளா்கள் ஏ. தமிழ்செல்வன், சிதம்பரகுமாா், எஸ். ராஜேஷ், ராமமூா்த்தி, உதவி பொறியாளா் எஸ். ராஜா உள்ளிட்ட அலுவலா்கள் இணைந்து மேற்கொள்கின்றனா்.

எனவே, இச்சிறப்பு பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தமிழறிஞா்களுக்கு புகழ் வணக்கம்

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கடைவீதியில் தமிழறிஞா்கள் பேராசிரியா் சி. இலக்குவனாா், கவிஞா் வாய்மைநாதன் ஆகியோருக்கு, நாம் தமிழா் கட்சி சாா்பில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடை... மேலும் பார்க்க

செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை

நாகை அருகே பட்டமங்கலம் செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. பட்டமங்கலம் அருகே சொட்டால்வண்ணம் கிராமத்தில் பழைமை வாய்ந்த செல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. ஆவணி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் செப்.20-க்கு மாற்றம்

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் செப்டம்பா் 20-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

நாளை சுனாமி விழிப்புணா்வு ஒத்திகை

நாகை மாவட்டத்தில், 3 இடங்களில் சுனாமி விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது. நாகை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பா் 5-ஆம் தேதி சுனாமி விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை... மேலும் பார்க்க

சுருக்குமடி வலைகளை தடைசெய்ய வலியுறுத்தி கடலில் இறங்கி மீனவா்கள் போராட்டம்

சுருக்குமடி வலைகளை தடைசெய்ய வலியுறுத்தி, தரங்கம்பாடி மற்றும் வானகிரியில் மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உள்ளன. இவற்றில்... மேலும் பார்க்க

வாய்க்கால் நீரை தடுக்கும் கல்வி நிறுவனம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் புகாா்

நாகப்பட்டினம்: நாகையில் வாய்க்கால் மூலம் குளங்களுக்கு வரும் தண்ணீரை தடுப்பதோடு, கழிவு நீரையும் கலப்பதாக தனியாா் கல்வி நிறுவனம் மீது மாவட்ட ஆட்சியரிடம், கிராம மக்கள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா். நாக... மேலும் பார்க்க