வேள்பாரி நாவலைத் திரைப்படமாக்குவதுதான் என் கனவு: ஷங்கர்
இயக்குநர் ஷங்கர் வேள்பாரி நாவலைத் திரைப்படமாக்குவது குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் ஷங்கரின் இந்தியன் - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் தோல்வியடைந்தது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிருப்தியடைந்தனர்.
அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் - 3 படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதில், ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் படுதோல்வியைச் சந்தித்து ஷங்கர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அடுத்ததாக, வேள்பாரி நாவலைத் திரைப்படமாக்கும் பணிகளைத் துவங்கியுள்ளார்.
இந்த நிலையில், எம்பியும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய ஷங்கர், “முதலில் என் கனவுப்படமாக இருந்தது எந்திரன். இப்போது, என் கனவு வேள்பாரி. காட்சிகளாக, கதாபாத்திரங்களாக, சம்பவங்களாக புதுப்புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தக்கூடிய கதையாக இருப்பதுடன் கேம் ஆஃப் த்ரோன்ஸ், அவதார் மாதிரி உலகளவில் பிரபலமாகக்கூடிய தமிழ்ப் படமாக உருவாகும் சாத்தியமும் வேள்பாரிக்கு இருக்கிறது. கனவு நனவாகட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மீண்டும் வில்லன்! கிரைம் திரில்லராக உருவாகும் மம்மூட்டியின் களம் காவல்!