ஸ்பானிஷ் கோப்பையை வென்றது பார்சிலோனா..! இதுதான் எல் கிளாசிக்கோ!
ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட்டை கூடுதல் நேரத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா த்ரில் வெற்றி பெற்றது.
எஸ்டாடியோ லா கார்ட்டுஜா ஒலிம்பிகோ டி செவில்லா திடலில் இன்று காலை நடைபெற்ற போட்டியில் முதல் 28ஆவது நிமிஷத்தில் பெட்ரி அசத்தல் கோல் அடித்தார்.
முதல் பாதியில் 1 கோல் உடன் பார்சிலோனா முன்னிலை பெற இரண்டாம் பாதியில் கிளியன் எம்பாப்பே ரோட்ரிகோவுக்கு பதிலாக களமிறங்கினார்.
ஆட்டத்தின் 70ஆவது நிமிஷத்தில் தனக்கு கிடைத்த ஃப்ரி கிக்கில் எம்பாப்பே கோல் அடித்து அசத்தினார்.
எம்பாப்பே மேஜிக்
1-1 என சமநிலைபெறவே ஆட்டம் சூடு பிடித்தது. ரியல் மாட்ரிட் தீயாக விளையாடினார்கள். அடுத்த 7ஆவது நிமிஷத்தில் அதாவது 77ஆவது நிமிஷத்தில் கார்னர் வாய்ப்பில் ஆரேலியன் டிஜானி சௌமனி கோல் அடித்தார்.
ரியல் மாட்ரிட் அணி 2-1 என முன்னிலை பெற்றது. ரியல் மாட்ரிட் வீரர்கள் ஆக்ரோஷமாகக் கொண்டாடினார்கள். இந்த மகிழ்ச்சி 7 நிமிஷத்தில் ரியல் மாட்ரிட்டை விட்டுச் சென்றது.
84ஆவது நிமிஷத்தில் பார்சிலோனா வீரர் பெர்ரன் டோரஸ் தனது அற்புதமான ஓட்டத்தினால் டிஃபென்டரை தாண்டிச் சென்று புத்திசாலினமாக கோல் அடித்தார்.
கடைசி நிமிஷத்தில் வென்ற பார்சிலோனா
ஆட்டம் 2-2 எனச் செல்லவே கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதிலும் கோல் அடிக்காததால் மீண்டும் இரு அணிகளுக்கும் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.
இந்த ஆட்டத்தில் 116ஆவது நிமிஷத்தில் ஜூல்ஸ் கவுண்டே அற்புதமான கோல் அடித்தார். இதன் மூலம் 3-2 என பார்சிலோனா த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் வீரர்கள் 123, 124ஆவது நிமிஷங்களில் 3 வீரர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
நடுவரை அடிக்கப் பாய்ந்த ரியல் மாட்ரிட் வீரர்
ரியல் மாட்ரிட் வீரர் ரூடிகர் நடுவரின் மீது பாட்டிகளை தூக்கி வீசுவார். அடிக்கவும் பாயவே அவரை ரியல் மாட்ரிட் வீரர்கள் இழுத்துப் பிடித்தனர்.
இந்தப் போட்டியில் பார்சிலோனா அணிக்கு 2 பெனால்டி வாய்ப்பினை நடுவர் தவறவிட்டார் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்தப் போட்டியில் 60 சதவிகித பந்தினை பார்சிலோனா அணியினரே தக்கவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பார்சிலோனா 32-ஆவது முறையாக ஸ்பானிஷ் கோப்பையை வென்றது.