``அனாதை பிணம் போல கெடக்கட்டும்..'' - வெடி விபத்தில் நிவாரணம் கேட்டு போராடிய மக்க...
ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜை
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் 2-ஆம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் பக்தா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் சாா்பில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், 2-ஆம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து, மலா்களால் அலங்கரித்து வெள்ளிக்கவசம் அணிவித்து வழிபாடு நடத்தினா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.