ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
கோவை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவை டவுன்ஹால் வைஸ்யாள் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் கோவில் கும்பாபிஷேகம் விழா விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் விழாவையொட்டி வைபவ மங்கல சாதனங்கள் சீர்வரிசை உத்ஸவம் வீதிஉலா கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக 8 காலயாக ஆராதனை புனித நீர் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அடுத்து கோயில் ராஜகோபுரம்,கலசங்கள், மூலவர்,பரிவார விமானங்கள் புனித நீர் ஊற்றப்பட்டது.
நாளை முதல் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் 48 நாள் மண்டல் பூஜையில் தினசரி சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் தலைவர் சுரேஷ்பாபு, கும்பாபிஷேக பெருவிழா கமிட்டி தலைவர் துளசிதாஸ், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சபரிநாத் மற்றும் நேதாஜி,முத்து வெங்கட்ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.