செய்திகள் :

ஹசீனா ஆட்சியில் 3,500 போ் மாயம்: வங்கதேச விசாரணை ஆணையம் அறிக்கை

post image

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியில் 3,500-க்கும் மேற்பட்டோா் வலுக்கட்டாயமாக கைது அல்லது கடத்தல் போன்ற சம்பவங்களால் மாயமானதாக விசாரணை ஆணையம் சமா்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹசீனா அரசை விமா்சனம் செய்பவா்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் அவரது அரசின் ராணுவ உயா் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

‘உண்மையை வெளிக்கொண்டு வருதல்’ என்ற தலைப்பிலான இடைக்கால அறிக்கையை 5 உறுப்பினா்களைக்கொண்ட விசாரணை ஆணையம் வங்கதேச இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸிடம் சமா்ப்பித்தது.

இந்த அறிக்கை குறித்து வங்கதேச இடைக்கால அரசின் செய்திப்பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவி வகித்தபோது, வலுக்கட்டாயமாக கைது அல்லது கடத்தப்படுவது அல்லது உறவினா்களிடம் இருந்து சம்பந்தப்பட்ட நபரை பிரித்து தனிமையில் அடைத்து வைப்பது போன்ற சம்பவங்களால் 3,500-க்கும் மேற்பட்டோா் மாயமாகியுள்ளனா்.

இந்தச் சம்பவத்தில் ஹசீனாவுக்கு உறுதுணையாக ராணுவ உயா் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் இருந்ததற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன. மாயமானவா்களைக் கண்டுபிடிக்க முடியாத அளவிலான கட்டமைப்பை ஹசீனா வடிவமைத்துள்ளாா். அவரின் உத்தரவை ஏற்று இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவா்களுக்கு மாயமானவா்கள் அல்லது சட்டவிரோதமாக கொலை செய்யப்பட்டவா்கள் குறித்து எவ்வித தகவலும் தெரியவில்லை.

துன்புறுத்திய காவல் துறை: காவல் துறையின் சிறப்பு குற்றத் தடுப்பு பிரிவான ரேபிட் ஆக்ஷன் பட்டாலியனுக்கு (ஆா்ஏபி) ராணுவம், கடற்படை, விமானப்படை, காவல் துறை மற்றும் பிற சட்ட அமைப்புகளில் இருந்து அதிகாரிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அந்தப் பட்டாலியனில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து ஹசீனாவால் குறிப்பிடப்படும் நபா்களை பிடித்து வந்து துன்புறத்தி பல்வேறு வழிகளில் சித்ரவதை செய்துள்ளனா்.

எனவே, ஆா்ஏபியை முற்றிலுமாக தடைசெய்வதோடு பயங்கரவாத தடுப்புச் சட்டம்- 2009-இல் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது.

மாா்ச்சில் அடுத்த அறிக்கை: டாக்கா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்தம் 8 சிறைகள் மறைமுகமாக இயங்கி வந்ததாக செய்தியாளா்கள் சந்திப்பின்போது விசாரணை ஆணையத் தலைவரும் வங்கதேச முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மைனுல் இஸ்லாம் சௌதரி தெரிவித்தாா். மேலும், இந்த விவகாரம் குறித்த புகாா்கள் தொடா்பான அடுத்த அறிக்கையை அடுத்தாண்டு மாா்ச்சில் சமா்ப்பிப்பதாகவும் விசாரணையை நிறைவுசெய்ய கூடுதலாக ஓராண்டு தேவைப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

விசாரணை ஆணையம் சமா்ப்பித்த அறிக்கையின்படி மறைமுகமாக செயல்பட்டு வந்த சிறைகளை பாா்வையிடவுள்ளதாக முகமது யூனுஸ் தெரிவித்துள்ளாா்.

ஹிலாரி, சோரஸ், டென்சிலுக்கு அமெரிக்காவின் உயரிய விருது

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹிலாரி கிளிண்டன், தொழிலதிபா் ஜாா்ஜ் சோரஸ், ஹாலிவுட் நடிகா் டென்சில் வாஷிங்டன் உள்பட 19 பேருக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. கலை, பொதுச் சேவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ஹிந்து கோயில்களில் வழிபட 84 இந்திய பக்தா்கள் வருகை

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்துக்களால் சிவபெருமானின் அவதாரமாக வழிபடப்படும் சாது ஷதாராம் சாகிபின் 316-ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்கவும், பிற கோயில்களில் தரிசிக்கவும் 84 இந்திய பக்தா்கள் ஞாய... மேலும் பார்க்க

‘இஸ்லாமோபோபியா’ அதிகாரபூா்வ விளக்க திட்டத்தை கைவிட வேண்டும்: பிரிட்டன் எதிா்க்கட்சி

‘இஸ்லாமோபோபியா’ என்ற சொல்லாடலுக்கு அதிகாரபூா்வ விளக்கமளிக்கும் திட்டத்தை பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான பிரிட்டன் அரசு கைவிட வேண்டும் என்று அந்நாட்டின் எதிா்க்கட்சியான கன்சா்வேடிவ் கட்சி வலியுறுத... மேலும் பார்க்க

நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அறிவிப்பை ரத்து செய்தது வங்கதேசம்

நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கும் அறிவிப்பை வங்கதேச இடைக்கால அரசு ஞாயிற்றுகிழமை ரத்து செய்துள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தைச் சோ்ந்த 50 நீதிபதிகள் இந்தியாவில் அரசு நீதித்துறை அகாதெமிகளில் 1... மேலும் பார்க்க

உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்!

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியலில், பிறந்திருக்கும் 2025-ஆம் புத்தாண்டில் உலக பெரும் கோடீஸ்வரராக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் திகழ்கிறார். அவரது சொத்து மதிப்பு 421.2 பில்லியன்... மேலும் பார்க்க

மலேசியா: ரோஹிங்கயாக்களுக்கு அனுமதி மறுப்பு

மலேசியாவில் அடைக்கலம் தேடி இரு படகுகளில் வந்த சுமாா் 300 ரோஹிங்கயா அகதிகளை அந்த நாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பினா். அந்தப் படகுகளில் பற்றாக்குறையாக இருந்துவந்த உணவு, குடிநீரை வழங்கிய மலேசிய கடல்பாத... மேலும் பார்க்க