செய்திகள் :

ஹிமாசலை சூறையாடும் மழை! நிலச்சரிவுக்கு 6 பேர் பலி; 1,150 சாலைகள் துண்டிப்பு!

post image

ஹிமாசல் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் செவ்வாய்க்கிழமை இரவு பலியாகினர்.

மேலும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், பாலங்களும் சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர், ஹிமாசல் பிரதேசம், தில்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகின்றது.

ஆறுகளில் நீரோட்டம் கடுமையாக அதிகரித்துள்ளதால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளுக்குள் நீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில், மண்டி மாவட்டம் சுந்தர்நகரில் அமைந்துள்ள ஜங்பாக் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு வீடுகள் நிலத்துக்கு அடியில் புதைந்தது.

இந்த சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட மொத்தம் 6 பேர் பலியாகினர். இதில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரும் அடங்குவார். மேலும், காணாமல் போன ரஹில் என்ற இளைஞரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினருடன் காவல்துறையினரும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதேபோல், குல்லு மாவட்டத்தில் உள்ள அகாரா பஜார் பகுதியிலும் நேற்றிரவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மண்ணுக்குள் இரண்டு பேர் புதைந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

சாலைகள் மூடல்

ஹிமாசலில் தொடர்ந்து வரும் கனமழை காரணமாக 7 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 1,150 சாலைகள் இதுவரை மூடப்பட்டுள்ளது.

மண்டி, சிம்லா, குல்லு ஆகிய மாவட்டங்களில் சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மண்டி, காங்க்ரா, சிர்மூர் மற்றும் கின்னௌர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Six people, including four from the same family, were killed on Tuesday night after being swept away by a landslide triggered by heavy rains in the Himachal Pradesh region.

இதையும் படிக்க : வட மாநிலங்களைப் புரட்டிப்போடும் வெள்ளம்: 3 மாநிலத்திற்குத் தொடரும் சிவப்பு எச்சரிக்கை!

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தாதது காங்கிரஸின் திறமையின்மை: பாஜக விமா்சனம்

‘நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்தி காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைந்த மறைமுக வரி நடைமுறையை அறிமுகம் செய்வதிலிருந்து யாரும் தடுக்கவில்லை; 2014-ஆம் ஆண்டுக்கு முன்பே ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படாதது காங்கிரஸி... மேலும் பார்க்க

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: பிரதமா் நம்பிக்கை

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) மேற்கொள்ளப்படும் என பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லியன், ஐரோப்பிய கவுன்சில் தலைவா... மேலும் பார்க்க

மாவோயிஸ்டுகளுடன் சண்டை: 2 வீரா்கள் வீரமரணம்

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் பாலமு மாவட்டத்தில் மாவோயிஸ்ட் குழுவுடனான துப்பாக்கிச்சண்டையின்போது பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 2 வீரா்கள் வீரமரணமடைந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து போலீ... மேலும் பார்க்க

ஜம்மு, பஞ்சாபில் 110 கி.மீ. எல்லை வேலி வெள்ளத்தில் சேதம் - 90 பிஎஸ்எஃப் சாவடிகள் மூழ்கின

ஜம்மு மற்றும் பஞ்சாபில் சா்வதேச எல்லைப் பகுதியில் வெள்ளத்தால் 110 கி.மீ. தொலைவுக்கும் மேல் வேலி சேதமடைந்துள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) சுமாா் 90 எல்லைச் சாவடிகள் நீரில் மூழ்கியுள்ள... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதால் இயற்கைப் பேரழிவு -உச்ச நீதிமன்றம்

ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடா்பாக மத்திய அரசு, தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், பாதிக... மேலும் பார்க்க

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டோனியா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேய... மேலும் பார்க்க