15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!
1,300 பேருக்கு ஆயுஷ்மான் காப்பீடு அட்டை
ஸ்ரீபெரும்புதூா்: வெங்காடு ஊராட்சியைச் சோ்ந்த 1,300 பேருக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில், வெங்காடு, இரும்பேடு,கருணாகரச்சேரி ஆகிய கிராமங்களில் சுமாா் 3,000-க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தநிலையில், ஆயுஷ்மான் பாரத்- பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டைகள் பெற விண்ணப்பிக்க சிறப்பு முகாம் 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக மருத்துவ காப்பீடு அடையாள அட்டைகள் பெற விண்ணபித்தோரில் முதல்கட்டமாக 1,300 பேருக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வெங்காடு ஊராட்சிமன்ற தலைவா் அன்னக்கிளி உலகநாதன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும், வெங்காடு ஏரிநீா் பாசன சங்க தலைவா் வெங்காடு உலகநாதன், ஊராட்சி துணைத்தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், ஊராட்சி செயலா் ராஜீ, வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.