செய்திகள் :

173 பேருடன் சென்ற விமானத்தில் தீ! பயணிகள் பாதுகாப்பாக வெளியேறும் விடியோ!

post image

அமெரிக்காவின் டென்வெர் விமான நிலையத்தில் இருந்து மியாமி புறப்பட்ட பயணிகள் விமானத்தின் டயரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அவசர வெளியேற்றம் வழியாக பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், விபரீதம் தவிர்க்கப்பட்டது.

விமானத்தில் 173 பயணிகள் 6 விமான ஊழியர்கள் பயணித்த நிலையில், அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் சிலருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மேற்கு அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாகாணத்திற்குட்பட்ட டென்வெர் விமான நிலையத்தில் இருந்து மியாமிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று புறப்பட்டது. 173 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் பயணித்த விமானம், புறப்பட்ட சிறுது நேரத்தில் டயரில் தீ விபத்து நேரிட்டு பெரும் புகை சூழ்ந்தது.

இதனையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு அவசர வெளியேற்றம் வழியாக பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். லேன்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகள் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். எங்கள் விமான பராமரிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் சேவையில் இருந்து அந்த விமானம் நீக்கப்பட்டுள்ளது என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

விமானப் பணிக் குழுவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும், பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான விடியோவில், புகை சூழ்ந்த விமானத்தில் இருந்து பயணிகள் ஒவ்வொருவராக பத்திரகா அவசர வெளியேற்றம் வழியாக அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

இதையும் படிக்க | போர் நிறுத்தத்திற்கு தாய்லாந்து - கம்போடியா ஒப்புதல்: டிரம்ப்

American Airlines Plane Tyre Catches Fire At Denver Airport, Passengers Evacuated | Video

தாய்லாந்து-கம்போடியா உடனடி சண்டை நிறுத்தம்

கோலாலம்பூா்: தாய்லாந்தும், கம்போடியாவும் எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக் கொண்டதாக மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் திங்கள்கிழமை அறிவித்தாா்.கம்போடிய பிரதமா் ஹன் மானெட்டும், ... மேலும் பார்க்க

தென் கொரியாவுடன் பேச்சுவாா்த்தை இல்லை: கிம் யோ ஜாங்

சியோல்: தென் கொரியாவில் புதிய மிதவாத அரசு அமைந்திருந்தாலும், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரியும் அரசில் செல்வாக்கு மிக்கவருமான... மேலும் பார்க்க

காஸா: மேலும் 60 போ் உயிரிழப்பு

காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் கூறினா்.உயிரிழந்தவா்களில் உணவுப் பொருள்களுக்காக நிவாரண முகாம்களில... மேலும் பார்க்க

உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம்: ரஷியாவுக்கு டிரம்ப் புதிய கெடு

லண்டன்: உக்ரைனுடான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ரஷியாவுக்கு அளித்திருந்த 50 நாள் அவகாசத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் பாதியாகக் குறைத்து, புதிய கெடுவை அறிவித்துள்ளாா்.பிரிட்ட... மேலும் பார்க்க

இந்த நூற்றாண்டின் நீண்ட சூரியகிரகணம் எப்போது? 6 நிமிடங்கள் உலகமே இருளில்!

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சூரியகிரகணமானது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி நிகழவிருப்பதாகவும், அப்போது ஐரோப்பா, வட ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கலாம் என்றும் க... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா!

தாய்லாந்து - கம்போடியா நாடுகளுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. தாய்லாந்து - கம்போடியா எல்லை தொடர்பான பிரச்சனையில் இரு நாடுகளுக்கு இடையே போர... மேலும் பார்க்க