இருளிலும், இக்கட்டிலும் மாட்டியிருப்பது இபிஎஸ்தான்: அமைச்சா் துரைமுருகன்
18 அடி நீள ராஜ நாகம்.. அசால்டாக பிடித்த கேரள வனத்துறை பெண் காவலர்!
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழியை பொய்யாக்கி, 18 அடி நீள ராஜ நாகத்தை, அசால்டாகப் பிடித்துள்ளார் கேரள வனத்துறை பெண் காவலர்.
அந்தப் புகைப்படங்களைப் பார்த்த மக்கள் சமூக வலைதளத்தில் அவருக்கு பாராட்டுகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
கேரள வனத்துறை அலுவலர் ஜி.எஸ். ரோஷிணி. பருதிபள்ளி வனச்சரக அலுவலரான இவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் 18 அடி நீள ராஜ நாகத்தை லாவகமாகப் பிடித்து பையில் அடைத்துள்ளார்.
பெப்பரா பகுதியில், குடியிருப்புக்கு அருகே, ஓடிக் கொண்டிருந்த ஓடையில் ஒரு ராஜ நாகம் இருப்பதைப் பார்த்து மக்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக விரைந்து வந்த ரோஷினி, ராஜ நாகத்தைப் பார்த்து பயப்படாமல், உடனடியாக, அதனைப் பிடிக்க முயன்றார். மிக நீண்ட குச்சிகளை வைத்துக் கொண்டு, ராஜ நாகத்தைப் பிடித்து பையில் அடைத்தார்.
இந்த விடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. இவர், தனது 8 ஆண்டு கால பணி அனுபவத்தில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்திருக்கிறாராம். இதுவரை, மிக அரிதான ராஜ நாகத்தை பிடித்ததில்லை என்றும், இதுதான் முதல்முறை என்றும் ரோஷிணி கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.