பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
18 ஆண்டுகளான காஜல் அகர்வாலின் திரைப் பயணம்..!
நடிகை காஜல் அகர்வாலின் சினிமா பயணம் 18 ஆண்டுகளை நிறைவடைந்ததுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஹிந்தியில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால் தமிழில் பழனி படத்தில் தனது திரைப் பயணத்தை தொடங்கினார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கோமாளி திரைப்படம் வெற்றி பெற்றது.
இவருக்கும் தொழிலதிபர் கெளதம் கிச்லு என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. 2022 ஏப்ரலில் ஆண் குழந்தைப் பிறந்தது.
திருமணத்துக்குப் பிறகு காஜல் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்
இந்தியன் 2 படம் அந்தளவுக்கு வெற்றி பெறவில்லை. காஜல் இந்தியன் 3 படத்தில் பெரும்பாலான காட்சிகளில் நடித்துள்ளார்.
சல்மான் கானின் சிக்கந்தர் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
She Literally Born To Rule Our Hearts ❤️#18YearsOfKajalAggarwal#RulingHeartsSince2007@MsKajalAggarwal#KajalAggarwalpic.twitter.com/WA9TdxxcH9
— KAJAL Trends™ (@KajalTrends) February 15, 2025