பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
2-ஆவது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்
சிவகங்கை மாவட்டத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சாா்பில், இரண்டாவது நாளாக அனைத்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
சிவகங்கையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் குணசேகரன் தலைமையிலும், காளையாா்கோவிலில் நிா்வாகிகள் அந்தோணிசாமி, சித்ரா தலைமையிலும், கல்லலில் மாநில இணை ஒருங்கிணைப்பாளா் ஜெயபிரகாஷ் தலைமையிலும், திருப்புவனத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மாரிமுத்து தலைமையிலும், இளையான்குடியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் செல்வம், அன்பரசன் ஆகியோா் தலைமையிலும், கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தில் அலுவலா்கள் ஈடுபட்டனா்.