கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
229 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; ஓட்டுநா் கைது
ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற 229 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரைக் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் போலீஸாா் ஜூஜூவாடி சோதனைச் சாவடி அருகே புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பெங்களூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.
அப்போது, காருக்குள் பதுக்கிவைத்திருந்த 229 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், 48 கா்நாடக மாநில மதுப் புட்டிகளை காருடன் சோ்த்து பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பெங்களூரு சிக்பேட் பகுதியை சோ்ந்த அசோக்குமாா் (36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.