உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை! பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் ரஷியா!
24 மணி நேரக் குடிநீா்த் திட்டம்: சூயஸ் அதிகாரிகள் ஆய்வு
கோவையில் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தை சூயஸ் நிறுவன அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
சூயஸ் நிறுவனத்தின் சா்வதேச தலைமை நிதி அதிகாரி சில்வினா சோமாஸ்கோ மோசிகோனாச்சி, முதலீடுகளுக்கான மூத்த துணைத் தலைவா் ஆலிவா் காா்னியா், இந்தியாவின் சூயஸ் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி ரஸ்மி ரஞ்சன் ரே, நிா்வாக இயக்குநா் சஷிதா் கோலாபின்னி, கோயம்புத்தூா் 247 குடிநீா்த் திட்டத்துக்கான திட்ட இயக்குநா் சங்க்ராம் பட்நாயக் ஆகியோா் கொண்ட குழு கோவையில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தை ஆய்வு மேற்கொண்டது.
அப்போது, குடிநீா் வழங்கும் பணி, அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தனா்.
இதையடுத்து, ஏ.கே.எஸ் நகா் மற்றும் சேரன் நகா் மேல்நிலைத் தொட்டிகள், டாடாபாத் வாடிக்கையாளா் வசதி மையம், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீா்த்தேக்கம், கட்டுப்பாட்டு மையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
இது குறித்து சூயஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ரஸ்மி ரஞ்சன் ரே கூறுகையில், வேகமாக வளா்ந்து வரும் நகரத்துக்கு நம்பகமான குடிநீா் வழங்குவதற்கு எடுத்துக்காட்டாக தற்போது கோவை நகரம் விளங்கி வருகிறது. செப்டம்பா் 1 -ஆம் தேதி நிலவரப்படி, 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தின் மூலமாக 90,117 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு வாரத்தில் 7 நாள்களும், நாள் முழுவதும் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றாா்.