கேரளம்: புலி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு! பொது மக்கள் போராட்டம்
'3 தீவிரவாதிகள் சுட்டு கொலை'- இந்தியா - பாக். எல்லையில் என்ன நடக்கிறது? - இந்திய ராணுவம் சொல்வதென்ன?
ஏற்கெனவே பரபரப்பாக இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் எல்லை, பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இன்னும் பரபரப்பாகி உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி என தொடர்ந்து அதிரடிகளை பார்த்து வருகிறது அந்த எல்லை.
அதன்படி, தற்போது, மூன்று தீவிரவாதிகளை வீழ்த்தியுள்ளது இந்திய ராணுவம்.
இது குறித்த இந்திய ராணுவத்தின் கூடுதல் பொது தகவல் இயக்குநரகத்தின் எக்ஸ் பதிவில், "ஜம்மு & காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தின் கெல்லர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்த உளவுத்துறை அமைப்புகளின் தகவலின் படி, இந்திய ராணுவம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இணைந்து மே 13, 2025 அன்று லஷ்கர்-இ-தொய்பா அல்லது தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்டை சேர்ந்த மூன்று பயங்கர தீவிரவாதிகளை கடுமையான போராட்டத்திற்கு பிறகு வீழ்த்தியுள்ளது.
Update : OPERATION KELLER
— ADG PI - INDIAN ARMY (@adgpi) May 14, 2025
Based on inputs by intelligence agencies about presence of terrorists in the Keller Forest of #Shopian District, Jammu & Kashmir, a joint operation was launched by #IndianArmy, @JmuKmrPolice and CRPF on 13 May 2025, resulting in neutralisation of… https://t.co/diHsasfXvApic.twitter.com/Zais9SLlMb
இந்த ஆபரேஷன், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு நடத்தப்பட்டது ஆகும்.
அந்தப் பகுதியில் நடந்த சமீபத்திய தீவிரவாத செயல்களுக்கு பிறகு இவர்கள் மூவரும் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து AK தொடர் துப்பாக்கிகள், அதிக அளவிலான வெடிமருந்துகள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் வெற்றி அனைத்து பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கும் இடையிலான சிறந்த ஒருங்கிணைப்பின் விளைவாகும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அதன் பணியில் இந்திய ராணுவம் அசைக்க முடியாததாக உள்ளது. அமைதியை சீர்குலைக்கும் ஒவ்வொரு முயற்சியும் தீர்க்கமான மற்றும் இடைவிடாத பலத்தால் எதிர்கொள்ளப்படும்" என்று பதிவிட்டுள்ளது.
இன்று காலை இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...
"சர்வதேச புலனாய்வு நிறுவனத்தின் குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் படி, மே 15, 2025 அன்று அவந்திபோராவின் டிரால், நாடர் என்ற இடத்தில் இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆபரேஷன் ஒன்றை தொடங்கியது.
இந்தக் குழுவிற்கு சந்தேகத்திற்குரிய சில நடவடிக்கைகள் தெரிந்தது. மேலும் தீவிரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இன்னும் ஆபரேஷன் தொடர்ந்து வருகிறது".
இந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் நாடர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆக, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளை அழிப்பதில் இந்திய ராணுவம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
OP NADER, Awantipora
— Chinar Corps - Indian Army (@ChinarcorpsIA) May 15, 2025
On 15 May 2025, based on specific intelligence input from Int agency, a Cordon & Search Operation was launched by #IndianArmy, @JmuKmrPolice and @crpf_srinagar at Nader, Tral, Awantipora.
Suspicious activity was observed by vigilant troops and on being… pic.twitter.com/LYmkhswL3b