செய்திகள் :

3 பிஎச்கே ஓடிடி தேதி!

post image

சித்தார்த் நடிப்பில் வெளியான 3 பிஎச்கே திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சித்தார்த்தின் 40-வது படமாக உருவான 3பிஎச்கே திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருந்தார்.

இதில் சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். சொந்த வீட்டை வாங்க ஒரு நடுத்தர குடும்பம் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதைப் படம் பதிவுசெய்திருந்தது.

ஆனால், சொந்த வீட்டை வாழ்க்கையின் வெற்றியாகவும் கனவாகவும் மட்டுமே பார்த்த இப்படம் திரைக்கதையால் சுமாரான படமாக எஞ்சியது.

திரையரங்குகளிலும் பெரிய வசூலைப் பெறவில்லை. இந்த நிலையில், இப்படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி சிம்பிளி சௌத் (இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில்) ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நாளில் அமேசான் பிரைம் தளத்தில் இந்தியாவிற்குள் இப்படம் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.

இதையும் படிக்க: ரசிகர்களுக்கு விருந்தா? கூலி கால அளவு அப்டேட்!

siddarth's 3bhk movie ott release date

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.3 பிஎச்கே ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான 3பிஎச்கே திரைப்படத்தில் சித்தார்த், சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளி... மேலும் பார்க்க

முத்தக் காட்சி அவசியமில்லை: ஷேன் நிகம்

பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் திரைப்படங்களில் இடம்பெறும் முத்தக்காட்சி குறித்து பேசியுள்ளார். பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஷேன் நிகம் நாயகனாகவும் கவனம் பெ... மேலும் பார்க்க

ஜூலை மாதத்தின் சிறந்த வீரர்..! விருதுகளைக் குவிக்கும் மெஸ்ஸி!

எம்எல்எஸ் தொடரில் லியோனல் மெஸ்ஸி பல விருதுகளை குவித்து வருகிறார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38 வயது) தற்போது அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் விளையாடி வருகிறார்.கடைசி போட்டியில் மெஸ்ஸ... மேலும் பார்க்க

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - பாண்டிராஜ் கூட்டணி!

நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் பாண்டிராஜ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி ... மேலும் பார்க்க

வைரலாகும் பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் காட்சி புகைப்படம்!

பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் காட்சி புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சும... மேலும் பார்க்க

லண்டன் வரை... கூலி புரமோஷன் தீவிரம்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் கவனம் ஈர்த்துள்ளன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேத... மேலும் பார்க்க