செய்திகள் :

3 BHK: "அதுக்குனு சல்மான் கான் மாதிரி சட்டைக்குப் பின்னாடி கண்ணாடி போடக் கூடாது" - சரத்குமார் கலகல!

post image

ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயாணி ஆகியோர் நடித்த '3 BHK' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரித்த இந்தப் படத்திற்கு, பின்னணி பாடகி பாம்பே ஜெயஶ்ரீயின் மகனான இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் மென்மையான இசையைக் கொடுத்திருக்கிறார்.

3 BHK
3 BHK

படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சரத்குமார் பேசும்போது, "என்னுடைய மகன் பிரபு (சித்தார்த்) படத்தைப் பற்றி நிறைய விஷயங்கள் இங்கே பேசிட்டாரு. அப்படிப் பேசுறதுதான் நல்லது.

ஆனா, அதுக்குனு சல்மான் கான் மாதிரி சட்டைக்கு பின்னாடி கண்ணாடி போடக் கூடாது (சிரித்துக்கொண்டே...). இந்தப் படத்துல பெரிய அளவிலான கேமரா ஷாட்கள் கிடையாது.

சின்ன வாடகை வீட்டுல நடக்கிற கதைதான் இந்தப் படம். ரெண்டு பாடல்கள், ஃபைட் காட்சிகள் வச்சோம்னு இல்லாம, ஶ்ரீ கணேஷ் அவர் நினைச்ச விஷயங்களைப் படத்துல வச்சிருக்காரு. இந்தக் கதையை மக்கள் தங்களோடு பொருத்திப் பார்க்கிறாங்க.

3 BHK
3 BHK

இப்படி ஒரு கதையை ஶ்ரீ கணேஷ் கொடுக்கணும்னு நினைச்சதே பெரிய விஷயம். அதுல அவர் இப்போ ஜெயிச்சும் இருக்காரு. அவர் சத்தம் போட்டுப் பேச மாட்டாரு. ஆனா, அவர் சத்தம் போட்டா யாராலையும் அங்கே பேச முடியாது.

இந்தப் படத்துக்கு அம்ரித் ராம்நாத்தோட இசை உயிர் கொடுத்திருக்கு. அவர் என்னோட வாட்ச் பிடிச்சிருக்குன்னு சொன்னாரு. அதை அவருக்கே பரிசா கொடுத்துடுறேன். சுப்மன் கில் மாதிரி அம்ரித், நல்ல இன்னிங்ஸ் ஆடணும்.

தேவயாணி இவ்வளவு இனிமையா பேசி நான் பார்த்ததே இல்ல. எப்பவுமே அமைதியாதான் இருப்பாங்க. ஆனா, அவங்க டைரக்டரா மாறின பிறகு இவ்வளவு பேச ஆரம்பிச்சிருக்காங்க." என்று கூறினார்.

Mamitha Baiju: `விஜய், சூர்யா, நிவின் பாலி, பிரதீப் ரங்கநாதன்' - சென்சேஷன் மமிதா பைஜுவின் லைன் அப்!

நடிகை மமிதா பைஜு தான் தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷன். அடுத்தடுத்து பெரிய நட்சத்திரங்களின் படங்களில் கமிட்டாகி, பட்டாம்பூச்சியாய் படப்பிடிப்புகளுக்கு பறந்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வ... மேலும் பார்க்க

``ஜாபர் சாதிக்கை உறுப்பினராகச் சேர்த்திருக்கோம்;ஆனா..." நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் விளக்கம்

`தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் புரடியூசர்ஸ் அசோசியேசன்' எனப்படும் இயக்குநர் பாரதிராஜாவைத் தலைவராகக் கொண்ட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் புதிதாக சேர்க்கிற உறூப்பினர்கள் குறித்த விபரங்களை அவ்வப்போது வெளியிடுவது வழ... மேலும் பார்க்க

Madhan Karky: ``நா.முத்துக்குமார் இருந்திருந்தா நான் பாடல் எழுதியிருக்க மாட்டேன்!" - மதன் கார்க்கி

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் பறந்து போ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Parandhu Po - Sunflower Songகுழந்தைகள் வளர்ப்பு, பொருளாதாரத... மேலும் பார்க்க

Parandhu Po: ``ராம் உயிருடன் இருக்கிறார் என்று அப்போதுதான் தெரிந்திருக்கும்'' - இயக்குநர் ராம்

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'.ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே வரவே... மேலும் பார்க்க

Parandhu Po: ``சினிமாவில் நடிக்க ஆசை இருக்கு'னு முதல்ல அம்மாகிட்ட சொன்னேன்; ஆனா..'' - கிரேஸ் ஆண்டனி

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'.ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே வரவே... மேலும் பார்க்க

Rashmika: 'ராஷ்மிகா சொல்வதால் அது உண்மையாகிவிடாது!' - ராஷ்மிகாவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் 'குபேரா' திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தின் ரிலீஸை முடித்த உடனே தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் வேலைகளுக்கு நகர்ந்துவிட்டார் ராஷ்மிகா. தற்போது, ராஷ்மிகா மந்த... மேலும் பார்க்க