Parandhu Po: ``சினிமாவில் நடிக்க ஆசை இருக்கு'னு முதல்ல அம்மாகிட்ட சொன்னேன்; ஆனா..'' - கிரேஸ் ஆண்டனி
இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'.
ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் 'பறந்து போ' படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று (ஜூலை 8) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.

அதில் பேசிய நடிகை கிரேஸ், “ சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று எனது அம்மாவிடம்தான் முதலில் சொன்னேன். இது நமக்கானது கிடையாது. நன்றாக படித்து வேலைக்கு போக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.
எனக்கு கலை, நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். படிப்பை விட எனக்கு இதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்று புரிந்துவிட்டது. நடிகையாக வேண்டும் என்று சிறுவயதிலேயே முடிவு செய்துவிட்டேன். ராம் சாரின் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது எனக்கு மிகவும் எமோஷனலாக இருக்கிறது.

சிவா சாருடன் நடிக்கும்போது எனக்கு ஒரு நண்பருடன் இருப்பதுபோல்தான் இருந்தது. இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றி” என்று நெகிழ்ச்சியாக பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...