செய்திகள் :

Madhan Karky: ``நா.முத்துக்குமார் இருந்திருந்தா நான் பாடல் எழுதியிருக்க மாட்டேன்!" - மதன் கார்க்கி

post image

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் பறந்து போ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Parandhu Po - Sunflower Song
Parandhu Po - Sunflower Song

குழந்தைகள் வளர்ப்பு, பொருளாதாரத் தேடலோடு இன்றைய நாள்களில் ஓடிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் எனப் பல விஷயங்களை இந்தப் படைப்பில் காமெடி கலந்து பேசியிருக்கிறார் இயக்குநர் ராம். இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மதன் கார்க்கி பேசும்போது, "இந்தப் படத்துல பங்கெடுத்துகிட்டதுல ரொம்பவே மகிழ்ச்சி. இந்தப் படத்துக்கு உண்மையான வெற்றி கிடைச்சிருக்கு. உண்மையான வெற்றின்னா, யாருக்கும் பொறாமை ஏற்படுத்தாத வெற்றி.

அப்படி கிடைக்கிறது எல்லாம் ரொம்ப அபூர்வம்," என்றவர், "'இது காஷ்மீரா கார்காலமா, என் கோவில் புறா, இந்த குளிர் தாங்குமா'னு அப்பா எழுதின வரியை மணி ரத்னம் சார் பார்த்துட்டு, 'நம்ம காஷ்மீர்ல படம் எடுக்கிறோம்.

Madhan Karky
Madhan Karky

அதைப் பாடலிலும் சொல்லணும்னு' கேட்டிருக்கார். அதன் பிறகுதான் 'புது வெள்ளை மழை'னு வரிகளை அப்பா எழுதினாரு.

அதே மாதிரி, இந்தப் படத்துல என்ன விஷுவலா இருக்கோ, அதை எழுதலாம்னு ராம் சார் சொன்னாரு. இப்படியான விஷயங்களையெல்லாம் உடைச்ச ராம் சாருக்கு முதல்ல நன்றி.

நா. முத்துக்குமார் இருந்திருந்தா இந்தப் படத்துல நான் பாடல் எழுதியிருக்க மாட்டேன். அப்படி அவங்களுக்கு இடையில ஆழமான நட்பு இருக்கு. இந்தப் படத்தோட வெற்றியில அவருக்கும் பங்கு இருக்கு.

நான் படத்தை முன்னாடி துண்டு துண்டா பார்த்திருந்தேன். பிறகு, பாடல்கள் இல்லாம பார்த்தேன். திரையரங்குகள்ல இப்போ முழுமையா பார்க்கும்போது அவ்வளவு அழகா இருக்கு.

இந்தப் படம் பார்க்கும்போது என்னோட மகன் என்கிட்ட, 'மக்கள் இந்தப் படத்தைக் கொண்டாடுறாங்க.

Madhan Karky
Madhan Karky

ஆனா, ஏன் எல்லோரும் அழ வைக்கிற மாதிரியான டார்க் படங்களை எடுக்கிறாங்க'னு கேட்டான். அப்போ நான், 'ஒருத்தரை அழ வைக்கிறது சுலபம், த்ரில்லர் உணர்வைக் கொடுக்கிறது சுலபம்.

ஆனா, சிரிக்க வைக்கிறது ரொம்ப கடினம்'னு சொன்னேன். அந்தக் காமெடிகள் மூலமா நிறைய விஷயங்களை நம்மை சிந்திக்க வைச்சிருக்கார்." எனக் கூறினார்.

Mamitha Baiju: `விஜய், சூர்யா, நிவின் பாலி, பிரதீப் ரங்கநாதன்' - சென்சேஷன் மமிதா பைஜுவின் லைன் அப்!

நடிகை மமிதா பைஜு தான் தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷன். அடுத்தடுத்து பெரிய நட்சத்திரங்களின் படங்களில் கமிட்டாகி, பட்டாம்பூச்சியாய் படப்பிடிப்புகளுக்கு பறந்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வ... மேலும் பார்க்க

``ஜாபர் சாதிக்கை உறுப்பினராகச் சேர்த்திருக்கோம்;ஆனா..." நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் விளக்கம்

`தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் புரடியூசர்ஸ் அசோசியேசன்' எனப்படும் இயக்குநர் பாரதிராஜாவைத் தலைவராகக் கொண்ட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் புதிதாக சேர்க்கிற உறூப்பினர்கள் குறித்த விபரங்களை அவ்வப்போது வெளியிடுவது வழ... மேலும் பார்க்க

Parandhu Po: ``ராம் உயிருடன் இருக்கிறார் என்று அப்போதுதான் தெரிந்திருக்கும்'' - இயக்குநர் ராம்

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'.ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே வரவே... மேலும் பார்க்க

Parandhu Po: ``சினிமாவில் நடிக்க ஆசை இருக்கு'னு முதல்ல அம்மாகிட்ட சொன்னேன்; ஆனா..'' - கிரேஸ் ஆண்டனி

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'.ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே வரவே... மேலும் பார்க்க

Rashmika: 'ராஷ்மிகா சொல்வதால் அது உண்மையாகிவிடாது!' - ராஷ்மிகாவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் 'குபேரா' திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தின் ரிலீஸை முடித்த உடனே தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் வேலைகளுக்கு நகர்ந்துவிட்டார் ராஷ்மிகா. தற்போது, ராஷ்மிகா மந்த... மேலும் பார்க்க

Parandhu Po: `நடிகர் சிம்புவுக்கு எப்போது திருமணம்?' - மிர்ச்சி சிவா அளித்த பதில் இதுதான்

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'.ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே வரவே... மேலும் பார்க்க