Parandhu Po: ``ராம் உயிருடன் இருக்கிறார் என்று அப்போதுதான் தெரிந்திருக்கும்'' - இயக்குநர் ராம்
இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'.
ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் 'பறந்து போ' படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று (ஜூலை 8) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.

அதில் பேசிய ராம், “ படம் பார்த்த எல்லோரும் இந்தப் படம் ஹிட் என்று சொன்னார்கள். ஹிட் என்ற இந்த வார்த்தையே எனக்கு புதிதாக இருந்தது. அப்படி ஒரு வார்த்தையை அறிமுகப்படுத்திய ஊடக நண்பர்களுக்கு நன்றிகள். கிட்டத்தட்ட 6 மாதங்கள் படத்தை திரையிட்டுக்கொண்டிருந்தோம்.
படத்தைப் பார்த்த சிலர் ஓடிடியில் வெளியிடுங்கள் என்று அட்வைஸ் கொடுத்தார்கள். ஆனால் நான் படத்தை தியேட்டரில் திரையிடுவதில் தீவிரமாக இருந்தேன். தொடர்ந்து புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டோம். தொடர்ந்து இன்டர்வியூஸ் கொடுக்க ஆரம்பித்தேன்.

அதன் மூலமாக இயக்குநர் ராம் உயிருடன் இருக்கிறார் என்று பலருக்கும் தெரிந்திருக்கும். மேலும் ‘பறந்து போ’ படமும் மக்களுக்கும் தெரிந்தது. 2025 காலக்கட்டத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளுடைய படம். 8 வயதுடைய பையனின் மனதைத் தொட்டுவிட்டோம் என்ற சந்தோஷம் எனக்கு இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...