செய்திகள் :

4-ஆவது சீசன் ஐஎல்டி20 போட்டிகள் அறிவிப்பு..! முன்னதாகவே தொடங்க காரணம் என்ன?

post image

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐஎல்டி20 போட்டிகள் வரும் டிசம்பரில் தொடங்குகின்றன.

உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் போட்டிகள் பிரபலமாகி வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2023-இல் முதல்முறையாக ஐஎல்டி20 போட்டிகள் நடைபெற்றன.

கடந்த சீசனில் நிகோலஸ் பூரன் தலைமையிலான மும்பை எமிரேட்ஸ் அணி கோப்பை வென்றது.

தற்போது, இதன் 4-ஆவது சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய நாளில் (டிச.2) தொடங்கி ஜன. 4ஆம் தேதி முடிவடைகின்றன.

இந்தத் தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன. பொதுவாக இந்தப் போட்டிகள் ஜனவரி - பிப்ரவரி வரை நடைபெறும்.

அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை போட்டிகள் பிப். - மார்ச் மாதம் வரவிருப்பதால் ஐஎல்டி20 போட்டிகள் முன்னதாகவே நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சீசனில் விருது வென்றவர்கள்

ரெட் பெல்ட் - மதிப்பு மிக்க வீரர் - சாம் கரண் (252.5 புள்ளிகள்)

கிரீன் பெல்ட் - அதிக ரன்கள் - சாய் ஹோப் (527 ரன்கள்)

ஒயிட் பெல்ட் - அதிக விக்கெட்டுகள் - ஃபசல்லாஹ் ஃபருக்கி (21 )

ப்ளூ பெல்ட் - சிறந்த யுஏஇ வீரர் - முகமது வசீம்

விராட் கோலியின் வீழ்ச்சிக்குக் காரணமான ஈகோவும் ‌ஆளுமைச் சிதைவும்!

சச்சின் டெண்டுல்கர் (40), ராகுல் திராவிட் (39), விவிஎஸ் லக்ஷ்மணனை (38) விட குறைவான வயதில் விராட் கோலி (36) ஓய்வுபெற அவரது ஈகோவும் நார்சிஸ்டிக் ஆளுமைக் குறைபாடும்தான் காரணங்கள் என்றால் வியப்பதற்கில்லை.... மேலும் பார்க்க

டெஸ்ட் வரலாற்றில் சாதனை படைத்த ஜடேஜா..! சிஎஸ்கே வாழ்த்து!

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா அதிக நாள்கள் (1,151 நாள்கள்) முதலிடத்தில் இருந்து சா... மேலும் பார்க்க

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 13) அறிவித்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மே... மேலும் பார்க்க

ரோஹித், விராட்டின் ஓய்வு இங்கிலாந்துக்கு மிகவும் சாதகமானது: மொயின் அலி

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெற்றுள்ளது இங்கிலாந்துக்கு மிகவும் சாதகமானது என முன்னாள் இங்கிலாந்து வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் மூத்த... மேலும் பார்க்க

பயிற்சி ஆட்டங்களை விராட் கோலி ஒருபோதும் விரும்பியதில்லை: முன்னாள் இந்திய பயிற்சியாளர்

பயிற்சி ஆட்டங்களை விராட் கோலி ஒருபோதும் விரும்பியதில்லை என இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிரு... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 13) அறிவித்துள்ளது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக... மேலும் பார்க்க