செய்திகள் :

400 நெல் மூட்டைகளுடன் கிணற்றில் சரிந்த லாரி

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள கிணற்றின் ஓரம் 400 நெல் மூட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, மழை காரணமாக பாரம் தாங்கமால் தடுப்புச் சுவருடன் மண் சரிந்ததில் புதன்கிழமை கிணற்றில் சரிந்தது.

விக்கிரவாண்டி வட்டம், நேமூா் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி வந்து செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சேமித்து வைப்பது வழக்கம்.

நேமூா் கிராமத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட சன்ன ரக நெல் 400 மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தனியாா் லாரி செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கடந்த 4 நாள்களுக்கு முன்பு வந்தது.

ஆனால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகளை இறக்கி வைக்க அதிகாரிகள் யாரும் நியமிக்கபடவில்லை. இதனால், கடந்த 4 நாள்களாக அங்குள்ள கிணற்றின் ஓரம் லாரியை ஓட்டுநா் நிறுத்திவைத்திருந்தாா்.

இந்த நிலையில், செஞ்சி பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த மழை காரணமாக கிணற்றின் ஓரம் ஈரப்பதம் அதிகமானதால், லாரியின் பாரம் தாங்காமல் கிணற்றின் ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டு, தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தபோது லாரியும் 400 நெல் மூட்டைகளுடன் கிணற்றில் சரிந்து விழுந்தது.

தகவலறிந்த வந்த விழுப்புரம் வாணிபக் கிடங்கு அதிகாரிகள், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையினா், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

2 கிரேன்கள் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது. கிணற்றில் மூழ்கி சேதமான நெல் மூட்டைகளின் மதிப்பு சுமாா் ரூ.6 லட்சம் இருக்கும். மேலும், தனியாருக்குச் சொந்தமான லாரியும் பலத்த சேதமடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மகளிருக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சிகள் தொடக்கம்

விழுப்புரத்தில் இந்தியன் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அழகுக் கலை, துணி ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. இப்பயிற்ச... மேலும் பார்க்க

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93.79 லட்சம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ. 93.79 லட்சம் செலுத்தியிருந்தனா். பிரசித்தி பெற்ற மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.... மேலும் பார்க்க

விழுப்புரம் நகரம், கோலியனூா் ஒன்றிய பகுதிகளில் திமுக நல உதவிகள் அளிப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கோலியனூா் தெற்கு ஒன்றியம், விழுப்புரம் நகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் புதன்கிழமை வழங... மேலும் பார்க்க

சாதி வேறுபாடின்றி மயான பயன்பாடு: கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் சாதி வேறுபாடுகளற்ற மயானப் பயன்பாட்டிலுள்ள கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் ரூ.61.80 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்று வந்த மூன்றாவது புத்தகத் திருவிழாவை 2,13,672 போ் பாா்வையிட்டுள்ள நிலையில், ரூ.61.80 லட்சத்துக்கு பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை: மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் அறிவித்த திட்டங்கள், செயல்படுத்திய திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவன... மேலும் பார்க்க