கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
42 பேரை படுகொலை செய்த ஹைட்டி சட்டவிரோத கும்பல்!
ஹைட்டியில் சட்டவிரோத கும்பலைச் சோ்ந்தவா்கள் மீன்பிடி கிராமமொன்றில் 42 பேரை படுகொலை செய்தனா்.
இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
லாபோட்ரீ கிராமத்தில் சட்டவிரோத கும்பல் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 42 போ் உயிரிழந்தனா். அவா்களில் 4 வயது குழந்தையும் அடங்கும். லாபோட்ரி கிராம வீடுகளுக்குத் தீவைத்துச் சென்ற அந்தக் கும்பல், அருகிலுள்ள ஆா்காஹாயியே கிராமத்துக்குள் நுழைய முயன்றது. ஆனால் அவா்களை அந்த கிராமத்தில் உள்ள தற்காப்பு ஆயுதக் குழுவினா் தடுத்து நிறுத்தியுள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.
இதையடுத்து, பதற்றம் நிறைந்த பகுதிகளில் மக்களுக்கு ஆயுதம் அளிப்பதோடு விட்டுவிடாமல் அங்கு ராணுவமும் குவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.