50 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த தபால் சேவை நிறுத்தம்; தபால் பெட்டிகளுக்கு விடைகொடுப்போம்!
டிஜிட்டல் யுகம் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சியடைந்து வரும் இந்த காலத்தில் எல்லாமே வேகம் அதிவேகம்தான். காத்திருப்பு என்ற வார்த்தைக்கூட பயன்பாட்டில்லை, கால வேகத்தில் காலாவதியாகிவிட்டது.
இங்கிலாந்தில், லோங்வில்லி மாகாண போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், மினிஸ்டர் ஃபாகத் என்பவரது மனைவியின் யோசனையில், முதல் தபால் பெட்டி 1653-ம் ஆண்டு அறிமுகமானது. தபால் பெட்டிக்கு மாதிரி வடிவத்தை கொடுத்தவர் சார்லஸ் ரீவ்ஸ்.
அதன்பிறகு 1852 வடமேற்கு ஐரோப்பா ஜெர்சி (Jersey) தீவில் பணியாற்றிய ஆந்தனி ட்ரோலோப் (Anthony Trollope) என்ற தபால் துறை அதிகாரி, மக்களுக்கு கடிதம் போட வசதியாக சாலைகளில் இரும்பு பெட்டிகள் அமைக்கும் யோசனையை செயல்படுத்தினார் என்று கூறப்படுகிறது.
1856 – பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் தெரு தபால் பெட்டிகள் நிறுவப்பட்டன. ஆரம்பத்தில் மரப்பெட்டிகள் இருந்தாலும், பிறகு இரும்பு மற்றும் எஃகு பெட்டிகள் வந்தன.

'சார் தபால் வந்திருக்கு!' எனக் குரல் கேட்டதும், தபால் வருமென காத்திருந்து வாங்கிப் பெற்ற காலம் எல்லாம் மாறிவிட்டது. அரசின் கடிதங்கள், ஆணைகள், நீதிமன்ற ஆணைகள், வங்கி கடிதங்கள் மட்டுமே தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. நவீன கால மாற்றத்திற்கு நாமும் மாறவேண்டும் என பெரிதாகப் பயன்பாட்டில் இல்லாத பதிவு தபால் சேவையை நிறுத்துப்படப்போகிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் பதிவு தபால் சேவையை (Registered Post Service) வரும் செப்டம்பர் 1-ம் தேதியில் ஸ்பீட் போஸ்ட் உடன் ஒருங்கிணைக்கப் போவதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.
பதிவு தபால்களின் மீதானஆர்வம் மக்களிடையே குறைந்த நிலையில் தபால் சேவைகளை நெறிப்படுத்துதல், கண்காணிப்பை மேம்படுத்துதல், சேவைகளை ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்குதல் ஆகியவற்றுக்காக இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs