500 போன் எண்கள் ஆய்வு.. புணே பாலியல் வழக்கில் மாறியது காட்சி! பெண்ணின் நண்பர் கை...
50 கிலோ இரும்புக் கம்பிகளை திருடியவா் கைது
நாமக்கல் அருகே இரும்புக் கம்பிகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், காதப்பள்ளியில் தனியாா் இரும்புக் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கிடங்கில் இருந்து 50 கிலோ எடையுள்ள இரும்புக் கம்பிகளை ஒருவா் இருசக்கர வாகனத்தில் திருடி செல்வதை அங்கிருந்தோா் கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதனையடுத்து, அவரை பிடித்து நல்லிபாளையம் போலீஸில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா் காதப்பள்ளி அருகே மட்டபாறைப்புதூரைச் சோ்ந்த ஜெகதீசன்(48) என்பவது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளா் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், அவரை கைது செய்து இரும்புக் கம்பிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.