செய்திகள் :

500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடுவதா? நயினார் நாகேந்திரன் கண்டனம்

post image

500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வந்துள்ள செய்தி, கடும் கண்டனத்திற்குரியது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வந்துள்ள செய்தி, கடும் கண்டனத்திற்குரியது. ஏழைக் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும், ஆரம்பகால வளர்ச்சியையும் கேள்விக்குறியாக்கும் இச்செயல், திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையைக் கோடிட்டு காட்டுகிறது.

திமுக அரசு தங்கள் அற்ப அரசியல் வீம்புக்காக நிராகரித்து வரும் தேசிய கல்விக் கொள்கையில் (NEP), அங்கன்வாடி பணியாளர்களுக்கு முன்னிலை வழங்கவும், கல்வி மற்றும் சிறுவர் பராமரிப்புத் துறையில் பயிற்சி அளித்து அங்கன்வாடி மையங்களைத் தொடக்கப் பள்ளி போலவே மாற்றி அமைப்பதற்கான முன்னோடியான முயற்சியும் வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால், வெற்று விளம்பரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் திமுக அரசு, அங்கன்வாடி ஊழியர்கள் பற்றாக்குறையைச் சரி செய்ய முடியாமல் அங்கன்வாடி மையங்களையே மூடுவதற்கு ஆயத்தமாகி வருகிறது.

2021 தேர்தலின்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு திமுக வழங்கிய வாக்குறுதியான (வாக்குறுதி எண் 313) "சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படும்" என்பது நான்காண்டுகள் ஆகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனவே, தமிழக முதல்வர் முதல்வர், அங்கன்வாடி பணியாளர்களுக்காக கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும், ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியும் வளர்ச்சியும் பாதிக்காத வகையில் அங்கன்வாடி மையங்களை மூடுவதைத் தவிர்த்து அவற்றைச் செவ்வனே நடத்திடவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

BJP leader Nainar Nagendran has said that the news that more than 500 Anganwadi centers are being closed is strongly condemnable.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது. சென்னையில் இருந்து 70 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை தூத்த... மேலும் பார்க்க

தவெக-வின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை

தவெகவின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலாசனைக் கூட்டம் ஜூலை 8ஆம் தேதி பனையூரில் நடக்க உள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழக... மேலும் பார்க்க

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன் கொலை வழக்கில் பாமக நிர்வாகி உள்பட மூவர் சரண்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் கொலை வழக்கில் மூவர் சரணடைந்தனர்.தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக,... மேலும் பார்க்க

அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சி இருக்கிறது: ஜி.கே. வாசன்

அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சி இருக்கிறது என்று தமாக தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் கட்சி அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியா... மேலும் பார்க்க

முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசு

முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தன்மை வாய்ந்த இத்த... மேலும் பார்க்க