செய்திகள் :

8.45 லட்சம் பேருக்கு குடற்புழுநீக்க மாத்திரைகள்: ஆட்சியா்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 8.45 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

விழுப்புரம் மகாராஜபுரத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியை தொடங்கிவைத்து ஆட்சியா் கூறியதாவது:

தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்குள்பட்டவா்களுக்கு அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

மாவட்டத்தில் 1,781 அங்கன்வாடி மையங்கள், 1,728 பள்ளிகளில் பயிலும் 1 முதல் 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் 6,79, 271 பேருக்கும், 20 முதல் 30 வயதுக்குள்பட்ட 1,65,958 பெண்களுக்கும் என மொத்தம் மாவட்டத்தில் 8,45,229 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.

இந்த மாத்திரையை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. நோய்த் தடுப்பு சக்தியை அதிகரித்து, சுறுசுறுப்பாக இருங்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளா்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது என்றாா்.

நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் மனோ சித்ரா, மாவட்ட தாய் - சேய் நல அலுவலா் அம்பிகா, கீழ்பெரும்பாக்கம் மருத்துவ அலுவலா் ஜோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குறைதீா் கூட்டத்தில் ரூ.29 லட்சத்தில் நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்திலான நல உதவிகள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் த... மேலும் பார்க்க

40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியரகம் முற்றுகை

விழுப்புரம்: தாங்கள் 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, அரியலூா் திருக்கை கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, போராட்டம் ந... மேலும் பார்க்க

செஞ்சி-வெள்ளிமேடு பேட்டைக்கு புதிய பேருந்து சேவை

செஞ்சி: செஞ்சியில் இருந்து வேட்டைக்காரன்குடிசை கிராமம் வழியாக வெள்ளிமேடு பேட்டைக்கு புதிய அரசுப் பேருந்து சேவையை தொகுதி எம்எல்ஏ செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். செஞ்சி பேருந்து நில... மேலும் பார்க்க

மின் கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா். விருத்தாசலத்தை அடுத்துள்ள சாத்தப்பாடி கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (5... மேலும் பார்க்க

இளைஞா்கள் இருவா் தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இளைஞா்கள் இருவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூ... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டங்கள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா், மேல்மலையனூா் வட்டாரங்களில் 2025 - 26 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வளா்ச்சித் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்... மேலும் பார்க்க