செய்திகள் :

Abhishek Sharma: `37 பந்துகளில் சதம்' - இங்கிலாந்து Ex பிரதமர் முன்னிலையில் அதிரடி காட்டிய அபிஷேக்

post image

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்தப் போட்டியைக் காண இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் வான்கடே மைதானத்துக்கு நேரில் வந்தார். கடந்த போட்டியின் முடிவில் 1 - 3 என தொடரை இழந்துவிட்ட இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, ஓப்பனிங் வீரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 7 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 16 ரன்கள் அடித்து வெளியேறினார்.

அபிஷேக் சர்மா

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மாவுடன் பார்ட்னர்ஷிப் போட்ட அபிஷேக் சர்மா, சிக்ஸ் ஃபோர் என வானவேடிக்கைக் காட்டினார். அணியின் ஸ்கோர் 136 ரன்களாக உயர்ந்தபோது திலக் வர்மா 24 ரன்களில் அவுட்டனார். அப்போது, 32 பந்துகளில் 10 சிக்ஸர் உட்பட 94 ரன்களுடன் களத்தில் நின்ற அபிஷேக் சர்மாவுடன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கைகோர்த்தார். அடில் ரஷீத் வீசிய 10 ஓவரில் அபிஷேக் சர்மா முதல் நான்கு பந்துகளில் 0, 0, 4, 1 என அடித்து 99 ரன்களை எட்டினார்.

அதைத்தொடர்ந்து, 11-வது ஓவரின் முதல் பந்திலேயே சிங்கிள் எடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்தார். 37 பந்துகளில் சதமடித்த அபிஷேக் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த இந்தியர்களின் பட்டியலில் ரோஹித்துக்கு (35 பந்துகளில் சதம்) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

அபிஷேக் சர்மா சதமடித்த அடுத்த பந்திலேயே சூர்யகுமார் அவுட்டாகி வெளியேற, கடந்த போட்டியில் காயம் காரணமாக முதல்பாதியோடு வெளிறிய ஷிவம் துபே களமிறங்கினார். துபேவும் தனது பங்குக்கு அதிரடியாக 13 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி என 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில், அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 13 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 135 ரன்களில் அடில் ரஷீத் பந்துவீச்சில் அவுட்டானர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்து, இங்கிலாந்துக்கு 248 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

U19 Women's T20 World Cup: மீண்டும் சாம்பியன்... தென்னாப்பிரிக்காவைச் சுருட்டிய இந்திய மகளிர் அணி!

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மகுடம் சூடியிருக்கிறது இந்திய மகளிர் அணி.மல... மேலும் பார்க்க

"மனைவி பார்த்துக்கொண்டிருப்பார்; அதைச் சொல்ல முடியாது" - மந்தனாவின் கேள்விக்கு ரோஹித்தின் பதிலென்ன?

உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்களுக்கு ஆண்டுதோறும் BCCI சார்பில் விருது வழங்கி வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று... மேலும் பார்க்க

BCCI Awards: வாழ்நாள் சாதனையாளர் சச்சின், ஸ்பெஷல் அவார்ட் அஸ்வின்... யார், யாருக்கு பிசிசிஐ விருது?

கிரிக்கெட் சிறந்து விளங்கும் மற்றும் சாதனை புரிந்த இந்திய வீரர்களுக்கு இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023-24ம்... மேலும் பார்க்க

Virat Kohli: 6 ரன்னில் க்ளீன் போல்ட்; மீண்டும் ஏமாற்றிய கோலி; ரஞ்சியில் தடுமாறும் சீனியர்ஸ்

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் தொடரிலும் (NZ 3 - 0), வெளிநாட்டில் விளையாடிய டெஸ்ட் தொடரிலும் (AUS 3 -1) படுமோசமான தோல்வியைச் சந்தித்தது.இந்திய அணியின் இத்தகைய தோல்விக்கு... மேலும் பார்க்க

Champions Trophy : நெருங்கும் டெட்லைன்; மைதானங்களை ரெடி செய்யாத பாக்?- சாம்பியன்ஸ் டிராபி நடக்குமா?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.இந்திய அணியின் போட்டிகளை தவிர மற்ற அனைத்து அணிகளின் போட்டிகளும் பாகிஸ்தானில் வைத்தே நடக்கவிருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபிக்க... மேலும் பார்க்க

`இந்தத் தலைமுறையின் சிறந்த வீரர் கோலி இல்லையா...' - ரிக்கி பாண்டிங்கின் வாதம் என்ன?

கிரிக்கெட் உலகில் இந்தத் தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன் இந்தியாவின் விராட் கோலியா, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தா, இங்கிலாந்தின் ஜோ ரூட்டா அல்லது நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனா என்கிற விவாதம் முடிவி... மேலும் பார்க்க