வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்காத 34,000 பேரின் ஓய்வூதியம் நிறுத்தம்
Anna University: ``சாரிடம் ஞானசேகரன் பேசினார்" - சிறப்பு விசாரணைக் குழுவிடம் உறுதிப்படுத்திய மாணவி
ஞானசேகரன் போனில் பேசியதை சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி கூறியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் செல்போனில் யாரையோ அழைத்துப் பேசியதாகவும் அதன் பிறகு அந்த சாருடன் இருக்க வேண்டும் என மிரட்டியதாகவும் மாணவி குறிப்பிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் 'யார் அந்த சார்' என்று கேள்வி எழுப்பி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு மாணவியிடம் தீவிர விசாரணையை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஞானசேகரன் போனில் பேசியதை சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி உறுதியாக கூறியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. விசாரணையில் ஃபோன் அழைப்பு வந்தப்போது ' மிரட்டிவிட்டு வந்தேன்' என்று ஞானசேகரன் பேசியதாக மாணவி கூறியிருக்கிறார். இதனால் ஞானசேகரன் சார் ஒருவரிடம் பேசியிருக்கிறார் என்பது இந்த விசாரணையில் உறுதியாகி இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs